இதயம் பத்துப் பைசா --- முஹம்மத் ஸர்பான்

புல்லாங்குழல்கள் போல
காயப்பட்ட ஆன்மா நான்
மாபிள் குண்டுகள் போல
காயப்பட்ட இதயம் நான்
பேருந்துப் பயணம் போல
ஆயுள் வரை எனக்குள் நீ
வண்ணத்துப் பூச்சி போல
கொள்ளை நிறக் கனவு நீ
இதயம் மென்பந்து போல
காற்றுள்ள வரை நீ தான்
கண்கள் தீப் பெட்டி போல
தீக் குச்சி யாவும் நீ தான்
மூச்சின் புல்வெளி போல
இமை கூட பம்பரம் தான்
அன்பு ஒரு வீணை போல
நீயும் நானும் ஒன்று தான்
அலைவரிசைகள் எங்கும்
நான் உயிர் சிந்திய பாடல்
மின்மினிப்பூச்சிகள் போல
இறந்து போன என் தேடல்
நீ வந்து போன சாலைகள்
புது யுக வாலி பேனாக்கள்
நீ தந்து போன துன்பங்கள்
அது நூலறுந்த பட்டங்கள்
பல கோடி இதயங்கள் என்
பாடல் கேட்டு கை தட்டும்
அந்தப் பாடல் எங்கும் என்
மூச்சுக்காற்று தாலாட்டும்

"இதயக் கருவறையில்
காதல் ஒரு முறை தான்
இதயக் கல்லறையில்
காதல் பல முறை தான்"

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (29-Aug-18, 10:32 pm)
பார்வை : 499

மேலே