தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 32 - = 84
“மாளிகையில் ஓர் மஞ்சள் நிலா
வாடுகிறாள் என் ஏக்கத்தினால்
மன்னவன் நான் ஏழ்மை நிலா
என்ன செய்வேன் உன்னையடைய..?”
“மன்னவா நீ என் உண்மை நிலா
நான் வாழுவதே உனக்காகத்தான்
ஏற்றத் தாழ்வென்னும் மடமை நிலா
ஒழியும்வரை ரோதனைதான் !”
வாழைக்கு இல்லை தடுக்கின்ற கணுக்கள்
வாழ்க்கையில் நிறைய இருக்குதம்மா..!
தடுக்கின்ற கணுக்களை உடைத்தெரிய
இருதயத்தில் இரும்பு உரம் வேணுமய்யா..!
பணத்தைப் பார்க்கும் மானிடரே
மனத்தைப் பார்க்க கூடாதா..!
பணத்தில் காணும் அதிசயத்தை
குணத்தில் காண முடியாதா..!
ஏழை காதல் ஊர்வலம் போக
கழுதை மேலே அனுமதியோ..?
மாடிவீட்டு திருமதியே உனக்கு
எவ்வளவு வேண்டும் வெகுமதிகள்?
கோயில் தெய்வங்களே...
எங்கள் கோரிக்கை நியாயங்களே !
ஒருநாள் வாழ்வையாவது
எங்களை ஒன்றாய் வாழவிடுங்களே...!