தேவை கொஞ்சம் நிழல்

தேவை கொஞ்சம் நிழல்...
தேடியலைந்தேன்,
எங்கும் வெறுமை....
நெருப்பு துண்டுகளால்
நிறைக்கப்பட்டவனாய்,
துடிக்கிறேன்....வெடிக்கிறேன்....

அலைந்தேன்....
ஆ...! அதோ ஓர் ஓட்டுகட்டிடம்,
ஓடு...ஓடு...
ஓடினேன்.... ஓடினேன்....
ஒருவழியாக
அடைந்து விட்டேன்
ஓட்டுவீட்டை...

அய்யோ...
இதென்ன கொடுமை,
ஓடுகளால் வேயப்பட்டிருக்கிறதா...?
இல்லை,
நெருப்புதகடுகளால் வேயப்பட்டிருக்கிறதா....?
பற்றியெரிகிறதே இப்படி,
வெளியேறவேண்டும்...
வெளியேறவேண்டும்...
வெளியேறினேன்...

வெயிலின் வெறியாட்டத்தில்
வெந்துகொண்டிருக்கிறேன்,
அதோ,
இன்னுமோர் கட்டிடம்,
ஓடு...ஓடு....
ஓடினேன்....
காலில் நெருப்பை
கட்டிக்கொண்டவனாய்
ஓடினேன்....

கட்டிடத்துக்குள் விழுந்தேன்,
அய்யோ,
இது கட்டிடமா...? இல்லை
நெருப்பு கூண்டா...?
தகிக்கிறதே இப்படி...
அந்த 'மின்விசிறியை தட்டு...'
அறை குளுரூட்டியை தட்டு...
செயற்கைகளை தட்டினேன்,
ஓ.... மின்வசதியில்லாதபோது
உன் வசதி எப்படி பலிக்கும்...?
நொந்து போனேன்,
இல்லையில்லை,
வெந்துபோனேன்...

வெளியே எட்டிப்பார்த்தேன்,
கண்கள் கூசியது,
எங்கும் வெயிலின் ஆட்சி,
நெருப்புமழை பொழிகிறது,
எஞ்சிய
இலையுதிர் மரங்களும்
எரிகின்றன பற்றி...
செடி,கொடிகள் கருகி
மிளகாய் புகையாய்
நெடியேற்றின...
நானும் கருகினேன்
இலை சருகாய்...

கொஞ்ச நேரத்தில்
முடிந்துவிடும்,
எல்லாம் முடிந்துவிடும்....
இறப்பின் தருவாயில்
கோபத்தோடு கேட்டேன்,
ஏ...சூரி(னி)யக்காரனே
ஏன் இப்படி
எங்களை அழிக்கிறாய்...?
சிரித்தான்,
மெல்ல சிரித்தான்,
சிரித்தான்...சிரித்தான்....
பலங்கொண்டு சிரித்தான்...
'ஏ.....மூடர்களே,
தவற்றை நீங்கள் செய்துவிட்டு
என்னை ஏன் சபிக்கீறீர்கள்,
எய்தவர்கள் நீங்கள் இருக்க
எய்யப்பட்டவன்
நான் என்ன செய்வது...?
இருப்பதை அழித்து
இல்லாததை செய்து கொண்டீர்கள்,
செய்வதெல்லாம் செய்துவிட்டு
என்மேல் குற்றம் சாட்டினால்
நான் என்ன செய்வேன்....'
விழித்தெழுந்தது
என் மனம்....

பின்குறிப்பு: இது கனவல்ல... நாளை நடக்க போகும் விபரீதம். பணத்தேவைகளையும்...மனத்தேவைகளையும்...நிறைவேற்ற இதேரீதியில் மரங்களை அழித்தால் நாளை....இருக்காது.

எழுதியவர் : பனவை பாலா.... (23-Apr-16, 10:26 am)
பார்வை : 68

மேலே