ஒண்பாவைத் தந்திடுவீர் ஒன்று - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
பொழிப்பருளும் மோனையில்லாப் போற்றலிலாப் பாட்டு
செழிப்பில்லை என்றுசொல்வேன்; செல்லும் - வழிதெரிந்து
வெண்பா எழுதிடுவீர் விக்கினந் தானின்றி
ஒண்பாவைத் தந்திடுவீர் ஒன்று!
- வ.க.கன்னியப்பன்