மீண்டும்

*******மீண்டும் ********

வெளியெங்கும் தெறித்துக் கிடந்த
இரத்தத் துளிகளால் மறுத்துப்போனது
நாசித் துவாரங்கள் ......

கறுப்புக் கொடிபிடித்த மேகம்
மெல்ல கண்ணீர்த்துளிகளால்
கழுவிக்கொண்டிருந்தது
படைப்பினங்களின் பாவங்களை.......

வெடிக்காத குண்டுகளை
தனக்கான உணவெனக் கருதி
நுகர்ந்து கொண்டிருந்தன
அலகு சிதைந்த புரவிகள்........

எரிந்த சருகுகளில்
இழந்த சிறகுகளை
தேடிக் கொண்டிருந்தன
பட்டாம் பூச்சிகள்........

இடம் பெயர்ந்த இனத்தின்
கடைசி வாரிசான ஒரு குருவி
தன் இரங்கலை
தெரிவித்துக் கொண்டிருந்தது....

பால்வீதி வரை
படர்ந்து கொண்டிருந்தது
மனித இனத்தின் கடைசிக் குரல்
ஒரு குழந்தையின் அழுகையாய் ......

எந்தச் சலனுமுமில்லாமல்
படைத்துக்கொண்டிருந்தான்
மீண்டும்
விலக்கப்பட்ட கனி
வேண்டிக் கேட்காத ஏவாளை

எழுதியவர் : பார்த்திபன் திலீபன் (26-Feb-16, 10:46 pm)
Tanglish : meendum
பார்வை : 83

மேலே