ராக ஆலாபனை
தென்றல் பாடும் பாடல் பூபாளமோ
தெரியாது
கதிர்விரிந்த போது கவிதையாக பூத்தன
கவின் மலர்கள்
வண்டுகள் பாடும் கீதம் என்ன ராகமோ
தெரியாது
தேன்மலர்கள் மயங்கித் தலையாட்டுது
மலர்ச் சோலையில்
இவள் இதழ்களின் ஆலாபனை என்ன ராகமோ
தெரியாது
அது பூமியில் புன்னகை என்று புகழ் பெற்ற
மௌன ராகமோ ?
----கவின் சாரலன்