நின்னை சரணடைந்தேன்
என் ஆதி உலகின்
ஆணிவேர் அடிக்கடி
கிளை பரப்பும்
நிச்சலனமற்ற இரவுகளில் ...................
பகலவன் மறைத்த
பேரிருளொளியில்
என் பால்யத்தின் நினைவுகள்
மட்டும்
பிரகாசமாய்..............
உன்னைப்பற்றி
கதைகள் ஆயிரம் கேட்ட எனக்கு
இன்று
ஆயிரமாயிரம் கதைகள்
உன்னிடமிருந்து....................
உன்
சிதறிய சொற்கள்
வானெங்கும் விண்மீண்களாய் ...................
அதன் அர்த்தம் காண
சிறைகள் தகர்த்து
சிறகுகள் தரித்தது
என் எண்ணமெனும் பறவை
ஏகாந்தமாய்..............
முதலில்
சொற்கள் கோர்க்க
எழுத்துக்கள் கற்றேன்
இறுதியில்
நானே எழுத்தாய்
சிதறினேன்
உன் சொற்களில் ..................
*****************திலீபன் ***********

