என்னை தொலைத்து போனதென்ன நியாயம்
என் கண்மணியை
கண்ணிமையில் ஏந்தி
கானகம் புறப்பட்டேன்
கவிதை ஓன்று
அரங்கேறியது கானகத்துள்
எண்ணங்களால் பல வண்ணங்களில்
தமிழ் என்னில் தீட்டிய ஓவியம்
எழுத்தாணி கொண்டு ஓலைச்சுவடியில்
எழுதப்படாத காவியம்
நதியில் நீராய் அல்ல வாழ்க்கை
காற்றில் மிதக்கும் இறகாய்...
என்னவாயிற்று இப்போது
காதல் போதையேறி பாதை மாறி
எங்கு போகுதோ இந்த மேகம்
என் வரவை நோக்கும் எந்தன் வானம்
நானும் தேடிப்பார்க்கிறேன்
எங்கும் காணோம் !
கலைந்து போனதோ கானம்
தொலைந்து போனதென்ன மாயம்
என்னை தொலைத்துப் போனதென்ன நியாயம் ?