குட்டி பாப்பாக்கு வாழ்த்து

எங்க வீட்டு பாப்பா
எடுக்க சொல்லும் பாப்பா..!
சின்ன சுட்டி பாப்பா
சிரிக்கும் குட்டி பாப்பா..!
உன் பாசம் கண்டு நிறையும்
என் சினம் கண்மூடி மறையும்..!
என் இலக்கணமும் துச்சம்
உன் மழலை பேச்சு சத்தம்..!
பனித்துளி ஏது குளிமை
உன்எச்சில் முத்தமே இனிமை..!
அழுவதிலும் நீ புதுமை
அடடா..
அடம் பிடித்தலே உன் வழமை..!
இறைவன் அருள்பெற்று
இல்லத்தார் அன்புபெற்று
இப்புவியில் பெயர்பெற்று
இன்புற்று வாழ்க ..
இன்று இரண்டாம் பிறந்தநாள் காணும் குட்டி பாப்பா "தியானா"க்கு வாழ்த்துக்களுடன்..