குழந்தைத் திருமணம்

குழந்தை திருமணம்...

பருவமொட்டு விரியும் முன்
மணப்பெண் வேடம்...
பள்ளி செல்லும் வயதிலோ
பள்ளியறைப் பாடம்....

கன்னியாகும் முன்னே
விலை போகும் பெண்மை..
தொட்டிலில் ஆடிய மழலை
தொலைந்து போய் கிடக்கிறாள்
கட்டில் மேல்...

அறியாத வயதில்
புரியாத விளையாட்டுக்கள்..
விடியாத இரவுகளில்
அணையாது எரிகிறது
மெழுகுவர்த்தி...

சிதைந்த அவள் உடலோடு
மரணிக்கிறது மலர்கள்...
மடிந்து உறைகிறது உதிரத்தோடு
கண்ணீர்...

தனிமையின் நரகமாய்
கடக்கின்றது நொடிகள்...
சுடுகாடு செல்லாமலே
மரணவாடை அடிக்கின்றது
நான்கு சுவர்களின் நடுவே...

உயிரற்ற கூடு உலாவித் திரிகிறது
உணர்வற்ற பிணமாய்....
இடைவேளையற்ற யுத்தத்தில்
உறவாடி இறக்கின்றது
அவள் பெண்மை....

எழுதியவர் : அன்புடன் சகி (9-Jan-17, 11:25 pm)
பார்வை : 3123

மேலே