காதலால் உலகை கட்டி வை
காதலே !
காதலால் உலகை
கட்டி வை !
காதலுக்கு காமமே
அடிப்படை என்பவர்கள்
முழு நிலவில்
கறையை மட்டுமே
காணும் கயவர்கள் !
மதம் என்னும்
மாயை விலக்கி
மனிதம் விதைத்திட !
சாதிகளெனும்
சாக்கடை நீக்கி
சமத்துவ ரத்தம்
பாய்ச்சிட !
அடுத்த தலைமுறையின்
கைகளில் ஆயுதங்களில்லை ,
மனங்களில் அன்பை விதைத்திட !
பணத்தை விடுத்து
குணத்தால் மனிதர்களை
மதிப்பீடு செய்ய !
இரத்தம் சிந்திடும்
போரில் கிடைக்கும்
வெற்றியை விட
அன்பானவர்களிடம்
ஆயிரம் முறை
தோற்றுப்போவதில்
கிடைக்கும் சுகமே
அலாதியானது
என்று உணர வைக்க !
காதலே உன்னால் மட்டுமே
முடியும் !
அணு,ஆயுதம்
உயிர் குடிக்கும் !
அன்பு பிணத்திற்கும்
உயிர் கொடுக்கும் !
ஆதலால் காதலே !
தேசங்களின்
எல்லைகள் அழித்துவிடு !
இன்பங்கள் விதைத்துவிடு !
வேற்றுமையில் ஒற்றுமையை
போர் செய்து பெறமுடியாது !
புரிதலால் மட்டுமே
அது சாத்தியம் !
ஆதலால் காதலே !
அறிவை ஆயுதமாக்கு !
கண்ணிய காவல் போடு !
அன்பை ஆட்சி மொழியாக்கு !
அகிம்சையால் இம்சை செய் !
உலகம் தழைத்திட. !
உயிர்கள் செழித்திட !
உலகே ஒளிமயமாகிட !
காதலே !
காதலால் உலகை
கட்டிப் போடு !