மாட மாளிகையில்

மாட மாளிகையில்
பெட்டி நெறயபணத்துடன்
நிறைஞ்ச மனசில்
இல்லாத சந்தோசம்
குவிந்து கிடக்கிறது
குடிசை வீட்டில்
உள்ள மனங்களில்

கடற்கரை ஓரத்திலுள்ள
ஆடம்பர பங்களாவில்
இல்லாத சந்தோசம்
அளவில்லாமல் கிடக்கிறது
குழந்தைகள் கட்டும்
கடற்கரை மணல் வீட்டில் !

பளிங்கு தரையில்
சறுக் சருக்கென ஷூவோடு
அடுத்தது பணத்தை
எதில் முதலீடு செய்யலாம்
என்ற யோசனையோடு
நடப்பவனிடம்
இல்லாத திருப்தி
தோட்டத்து வேலைமுடித்து
வெறுங்காலோடு வீட்டுக்கு
வரும் உழைப்பாளியிடம்
இருக்கிறது

ஆளுயர கண்ணாடியில்
அழகு பார்த்துமுடித்து
லிப்ஸ்டிக் சரிசெய்தபின்
பளிச்சிடும் முகத்தில்
இல்லாத சிரிப்பின்
அழகு அத்தனையும்
கொட்டிக் கிடக்கிறது
குனிந்து குடத்துநீரை
மொண்டு முகம்
கழுவிய தாவணி
தேவதை முகத்தில் ....

மெத் மெத்தென
சோபாவில் உட்கார்ந்து
ரிமோட்ஐ அழுத்தி
அழுத்தி ஒவ்வொரு
சேனல் நிகழ்ச்சியிலும்
எதையோ தேடிக்கொண்டு
யார் யாரோ பேசுவதை
கேட்டுக்கொண்டு பக்கத்தில்
இருப்பவரிடம் பேச மறந்துபோன
மேல்தட்டு குடும்பத்தில்
இல்லாத நிம்மதி
சாணி மொழுவிய
முத்தத்தில் இருக்கும்
திண்ணையில் அமர்ந்து
பேசிக்கொண்டிருக்கும் அந்த
கிழவிகளிடம் இருக்கிறது

மாடுலர் கிச்சன்
என்று அடுக்கடுக்காய்
வசதியுடன் கூடிய
அடுப்பங்கரையில் இருந்து
வராத வாசம் பக்கத்துக்கு
வீட்டு ஓலைக்குடிசை
அருகே வெளிப்புறம்
செங்கல் அடுப்பில்
இருந்து எழும்பி
தெருவையே மணத்தி
அவங்க வீட்டு
சாப்பாட்டை ஊருக்கே
சொல்லிக் கொண்டிருந்தது !!!

மாட மாளிகையிலும்
அடுக்கு மாடிகளிலும்
கேட்காத சிரிப்பு சத்தம்
கேட்காத அரட்டை சத்தம்
எப்போதும் கேட்டுக் கொண்டே
இருக்கிறது ஓரமாய் இருக்கும்
அந்த குடிசை வீட்டில்
அந்த ஓட்டு வீட்டில்
அந்த சின்ன வீட்டில்
அந்த ஏழை வீட்டில்

ஆனால் பாவம் அந்த
ஏழை நினைத்துக் கொள்கிறான்
எவ்ளோ பெரிய வீடு
என்னமாய் வாழ்கிறார்கள் என்று
நிஜம் தெரியா நிழலாய்

பணக்காரர்கள் தேடோ தேடென்று
தேடும் புதையல் ஏனோ
ஏழைகளின் வீட்டுக்குள்
தானாகவே வந்து
கால்மேல் கால் போட்டு
உட்கார்ந்திரு கொண்டு
சிரித்துக் கொண்டே இருக்கிறது
அது நிம்மதி !!!

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (23-Jan-18, 8:37 pm)
சேர்த்தது : யாழினி வளன்
Tanglish : maada maalikaiyil
பார்வை : 609

மேலே