அஃது யாதென அதுவே சொல்லும் 5

[ அஃது, வாண்திகழ் தண்திங்கள்...! ]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கருமுகில் திரையினில்
கனிவொளி பிறைமதி
நகர்வலம் வருமெழில்
உருவாக் கும்!

சுழலென வருமரு
உருவுடை சலனனும்
தொடவுன தருகினில்
தவமாக் கும்..!

தொடவரின் பிறைமதி
முகம்சிவந் துடன்முகில்
துகிலதை உடல்தனில்
உடையாக் கும்..!

ஒருஅரை யெழில்வளர்
பிறைவளர் வளர்மதி
கனவினில் கதிரவன்
களிதா னோ?

மறுவரை குறைபிறை
துயரெனுஞ் சிறைபிடி
மகளினை பகலவன்
மறந்தா னேன்?!

சுடவருங் கதிரவன்
கதிரினை யொடித்துடன்
மனங்கவர் மதியிடம்
விரையென் றேன்...!

விடுவவள் குணமது
குழவியின் குழைமதி,
நிறைமதி பொழுததில்,
நலமென் றான்...!


**************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (11-Aug-15, 10:48 am)
பார்வை : 361

மேலே