தேம்ஸ் நதி அழகு
இலண்டன் நகர் அழகு,
நகரத்தில் தேம்ஸ் நதி அழகு;
அதன் இரு மருங்கு கரைகளும் அழகு,
கரைகளை ஒட்டிய நடைபாதை அழகு;
நதியில் செல்லும் படகுகள் அழகு,
படகில் பயணிக்கும் பெண்கள் அழகு;
நதியில் நீந்தும் வண்ண, வெண் நிற
அன்னப் பறவைகள் அழகு.
காலையும் மாலையும் ரெட்டிங் -
கேவெர்ஷாம் பாலத்தில் நின்றபடி,
அன்னப் பறவைகள் நதி நீரில் மூழ்கி,
மீன் பிடிப்பதைக் காண்பது கொள்ளையழகு.
தேம்ஸ் நதி அழகு
அழகிய இலண்டன் நகரமும் மிக்கழகு,
எழிலார் நகரில் தேம்ஸ்நதி அழகு;
அதனிரு மருங்கு கரைகளும் அழகு,
கரைகளை ஒட்டிய நடைபாதை அழகே!
நதியில் செல்லும் படகுகள் அழகு,
படகினில் செல்லும் பெண்கள் அழகு;
நதியில் நீந்தும் வண்ண, வெண்ணிற
அன்னப் பறவைகள் மிகமிக அழகே!
காலையும் மாலையும் ரெட்டிங் இணையும்
கேவெர் ஷாம்பாலத் தினிலே நின்றபடி,
அன்னப் பறவைகள் நதிநீரில் மூழ்கி,
மீன்பிடிப் பதைக்காண் பதுகொள்ளை யழகே!