மரம் சொல்லும் கதை - 2
உயரே இருந்து
விழுந்த மூன்றில் ;
பாதி உயிர்த்த நிலையில் ,
இரத்த நிறத்துடன்
இரண்டு நொறுங்க ..
மீதிய மூன்றாவது
முட்டையை தேடியவாறே ;
அங்கும் இங்குமாக
பறந்து கொண்டிருந்தது ,
அந்த காக்கை !!
மெலிந்த சிறு
வேப்பம் தண்டு பொருக்கி :
கட்டிய கூடங்கு ,
நசுங்கிச் சிதற ..
தன் பிள்ளைகளுக்கு
வழி காண்பித்து ,
தானும் தப்பித்து ;
அதிவேக இதயத்துடிப்புடன் ;
சாலையோரம் நின்று
வேடிக்கைப்பார்த்தது ,
அந்த அணில்பிள்ளை !!
அறுத்த நொடியில் ,
அவ்விடம் துறந்து ;
அருகிலிருந்த
பதிமூன்றுமாடிக் கட்டிடத்தில் ,
விரைந்து தாவியே ;
ஒன்பதாம் மாடியின்
ஓரத்தில் நின்று ;
நடப்பதை கவனித்தது ,
அந்த மந்தி !
வந்தவழியே ,
வேகமாகத்
திரும்பிக் கொண்டிருந்தது ;
அதன் நிழலில் ,
தினம் தினம்
ஓய்வெடுத்துச் செல்லும்
அந்த ஆநிரைக்கூட்டம் !
எதுவும்
நடக்காததுபோல் ;
பார்த்தும்
பார்க்காததுபோல் ;
வெட்டப்பட்ட
அந்த மரத்தினை
தாண்டியவாறே ;
எதையோ தேடிக்கொண்டு ,
ஊர்ந்து கொண்டிருந்தது ..
ஆறறிவு மனிதஇனம் !!
- கற்குவேல் . பா