இறைவனும் மனிதனும் ஆடும் சதுரங்கம்
ஒவ்வொரு மனிதனையும் எவ்வளவு
வித்தியாசமாக படைத்து விட்டு இறைவன்
அவ்வப்பொழுது சிக்கல்களில் மாட்ட விட்டு
அவரவரை தன்னிடமே வசப்படுத்துகிறான்?
எவ்வளவு பலமிக்க ஆணாக
இருந்தாலும் ஏதாவது ஒரு
பலமற்ற பெண்ணிடம்
தோற்று தான் போகிறான்..
எத்தனை குணமிக்க பெண்ணாக
இருந்தாலும் ஏதாவது ஒரு
பிரச்னையால் குடும்பத்தில்
தடுமாறித்தான் துடிக்கிறாள்...
மீண்டும் மீண்டும் அதே புள்ளிகள்
அதே மாதிரியே விதம் விதமான கோலங்கள்
அப்படியே வாழ்ந்து வாடித்தவிக்கும் குடும்பங்கள்
இத்தனையையும் தாங்கி கொண்டு பயணிக்கும் வாழ்க்கைகள்...!