நான் தான் இப்படி சமூகமே, நீயும் கூடவா அவ்வளவு மோசம்

நான் எப்படி இருப்பேன் ?
என்ற பார்வையற்றவரின் கேள்விக்கு
நான் பதிலளிக்க முடியாமல்
ஊமையாகி விட்டேன்.

என்னை தயை செய்து
கொன்று விடுங்கள் என
நோயில் துடிப்பவரைக்கண்டு
நெஞ்சு வலிக்கிறதே..

கண்முன் நடக்கும் அசிங்கத்தை கண்டபின்னும்
கண் மூடி சென்று ஒதுங்கிக்கொள்ளும்
என் சமூகமே, என்னைப்போல்
நீயும் எப்போது கோழையானாய்?

எழுதியவர் : செல்வமணி (9-Jun-16, 9:58 pm)
பார்வை : 122

மேலே