புறக்கணிக்கும் நிழல்கள்
வயதை புதைக்கும்
மனது வேண்டும்
அடடா
சொல்லடா
உதயமாகா ஞாயிறு
உலகை இருளாக்கும்
திங்கள் பெண்ணே யார் தான்
உன்னை இங்கு புகழும்(ஏற்கும்)
சொல்லடா
இன்னும் தான் மெல்லடா
திறக்காத கதிர்கள்
வாழ்க்கை கருகும்
மறக்காத வலிகள்
ஈழம் சொல்லும்
தோற்றத்தின்
மாற்றம்
வெறுப்பை உமிழும்
பட்ட மரத்தில்
பார்வை விழுவதே இல்லை
பாத்திரத்தில் நேத்திரம்
பதிவதே இல்லை
நிறம்
பதமாய்
உதறி தள்ளுகிறது
இருளை
வாசமில்லா காகித பூ
யார் சூடிடுவார்
தேய்பிறை நிலவை
யார் ரசித்திடுவார்
~ பிரபாவதி வீரமுத்து