எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விதை நெல்லும் நீட் தேர்வும்... உடல்வலி உள்ளத்தின் நோவு...

விதை நெல்லும் நீட் தேர்வும்...

உடல்வலி உள்ளத்தின் நோவு
மருண்ட திசைகள் 
புரியா மொழி
உறக்கம் மறுத்த இரவு
அச்சமூட்டிய பரிசோதனைகள்
நடுங்கிய விரல்கள் வழி 
நட்டு வைத்த விடைநாற்றுகள் ......
......இவற்றுக்கெல்லாம்தான் 
அப்பா காசு கொண்டுவந்திருந்தார்
-விதை நெல்லை விற்று....
அம்மாவின் பங்குக்கு தாலி....
அப்பாத்தாவும் பாம்படம் தொலைத்திருந்தாள்.
தங்கையின் கண்களில் 
தமையனின்மருத்துவ ஒப்பனை 
ஒட்டிக்கிடக்க
ஊர்மாறி ஊர்வந்த அவன் 
“ நீட்”எழுதி 
பசியோடு கிடக்கும் அப்பனுக்கு விளக்கம் கூற
வந்தனை வரவேற்றது 
விதை நெல்காசில் பதராகிப் போன அப்பன்
ஊடகங்களின் இருநாள் தீனியாகிய அவன்
விறைத்துப்போயிருந்த அப்பா கைகளை 
விரித்துப் பார்த்தான் 
வடை ஒன்று .....பிஞ்சிப்போய்
தன் பசிக்காய்.....??!!!!! 

- அகன்

பதிவு : agan
நாள் : 7-May-18, 10:55 am

மேலே