உன் தலைமைக்கு ஏங்குதடா என் தமிழ் நாடு
"உன் தலைமைக்கு
ஏங்குதடா
என் தமிழ் நாடு "
சேரன் எங்கே ;
சோழன் எங்கே ;
தமிழ்சங்கம் வைத்த ;
பாண்டியன் எங்கே !
வீரம் எங்கள் மரபு என்றோம் ,
அடங்க மறுத்து ;
தலை நிமிர்ந்து சென்றோம் ...
தலைமுறைகள் மாறியதால்;
சரித்திரங்கள் சாய்த்திடுமோ !
மரபு வழி வந்ததெல்லாம் ;
மறந்து கூட போயிடுமோ !!
எழுந்து வா இளைஞனே ;
உன் தலைமுறை மீட்டெடுக்க....
சதிகள் யாவும் சாய்த்தெடுத்து ;
சரித்திரத்தில் இடம் பிடிக்க ....