தீ ஜெ அகாஷ் வருண் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : தீ ஜெ அகாஷ் வருண் |
இடம் | : பட்டுக்கோட்டை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Jun-2016 |
பார்த்தவர்கள் | : 181 |
புள்ளி | : 31 |
இமை கூட இதழாகி
தனிமொழி அது பேசும் ...
இலக்கணம் ஏதும் இன்றி
புதுஇலக்கிய உரை நிகழும் ...
காதல் மொழி இடம் மாறும்
காற்றும் அங்கு கதைப்பேசும் ...
காதில் கேட்ட கால்கொலுசும்
மோகத்தில் சிணுங்கி நிக்கும்...
முத்தம் வாங்க இதழ்ஏங்கும்
வெட்கம் வந்து தடைபோடும் ...
மொத்தமாக ஏத்துக்கொள்ள
மஞ்சள் தாலி காத்துநிக்கும் ....
இமை கூட இதழாகி
தனிமொழி அது பேசும் ...
இலக்கணம் ஏதும் இன்றி
புதுஇலக்கிய உரை நிகழும் ...
காதல் மொழி இடம் மாறும்
காற்றும் அங்கு கதைப்பேசும் ...
காதில் கேட்ட கால்கொலுசும்
மோகத்தில் சிணுங்கி நிக்கும்...
முத்தம் வாங்க இதழ்ஏங்கும்
வெட்கம் வந்து தடைபோடும் ...
மொத்தமாக ஏத்துக்கொள்ள
மஞ்சள் தாலி காத்துநிக்கும் ....
ஒரு பார்வை பாக்காத !
மனசோட நீ பேசிடு !
கவி போல நா மாற
நிஜமாய் நீ வந்திடு !
மழை தூறல் போல வார்த்தையது உதிரும் !
மண்வாசமாய் புது கவிதை மலரும் ...
நினைவெல்லாம் நீயாக
எனைஆள கூடாதென !
தூரத்தில் நான் சென்றேன்
நெருப்பாக நெஞ்சானதே !
வெறுத்தாலும் நீ என்னை
மறக்காத நாளில்லையே !
மறைத்தாலும் என் அன்பு
முடியாத பெரும்தொல்லையே !
வா வா தமிழா ...
வா வா தமிழா...
நீ மறந்து கிடக்கும் தமிழ்
மறைகள் எல்லாம்
நினைவில் கொண்டு
எழுந்து வா வா ...
புதைந்து கிடக்கும்
நம் புதையல் கோடி
அதை மறைக்க துடிக்கும்
எதிரி மோதி
நம் தலைமுறை திறமை
திறப்போம் வா வா ...
அரசியல் வேண்டாம்
சாதியும் வேண்டாம்
சங்கங்கள் வைக்கும்
நடிகனும் வேண்டாம்
தமிழால் இணைந்த நம்
உணர்வே போதும்
நம் கூட்டம் கண்டு
உலகம் வியக்கும் ...
ஆதி தமிழன் உலகம் ஆண்டான்
வாழும் தமிழன் ஆள்வது என்றோ ???
சுத்த தண்ணி மாசுபட்டு
கடலோட கலக்குது ..
கடல் நீரை சுத்தம் செஞ்சி
குடிநீரும் விக்கித்து ...
விவசாய நிலமெல்லாம்
கட்டிடமா மாறுது ...
கட்டிடத்தின் மாடியில
குட்டி தோட்டம் வளருது ..
மண்ணுக்கு உரம் போட்டு பூச்சியெல்லாம் சாவுது ..
மண்ணுல வெளஞ்சதெல்லாம்
பூச்சி மருந்தா மாறுது ...
இயற்கையை அழிச்சிப்புட்டு
அறிவியலும் வளருது ...
மனிதனோட ஆயுள் மட்டும்
படி படியா குறையுது ..
சுத்த தண்ணி மாசுபட்டு
கடலோட கலக்குது ..
கடல் நீரை சுத்தம் செஞ்சி
குடிநீரும் விக்கித்து ...
விவசாய நிலமெல்லாம்
கட்டிடமா மாறுது ...
கட்டிடத்தின் மாடியில
குட்டி தோட்டம் வளருது ..
மண்ணுக்கு உரம் போட்டு பூச்சியெல்லாம் சாவுது ..
மண்ணுல வெளஞ்சதெல்லாம்
பூச்சி மருந்தா மாறுது ...
இயற்கையை அழிச்சிப்புட்டு
அறிவியலும் வளருது ...
மனிதனோட ஆயுள் மட்டும்
படி படியா குறையுது ..
"உன் தலைமைக்கு
ஏங்குதடா
என் தமிழ் நாடு "
சேரன் எங்கே ;
சோழன் எங்கே ;
தமிழ்சங்கம் வைத்த ;
பாண்டியன் எங்கே !
வீரம் எங்கள் மரபு என்றோம் ,
அடங்க மறுத்து ;
தலை நிமிர்ந்து சென்றோம் ...
தலைமுறைகள் மாறியதால்;
சரித்திரங்கள் சாய்த்திடுமோ !
மரபு வழி வந்ததெல்லாம் ;
மறந்து கூட போயிடுமோ !!
எழுந்து வா இளைஞனே ;
உன் தலைமுறை மீட்டெடுக்க....
சதிகள் யாவும் சாய்த்தெடுத்து ;
சரித்திரத்தில் இடம் பிடிக்க ....
வீர தமிழா; நிமிர்ந்து வாடா ...
சீறும் காளை; அவிழ்த்து விடுடா ...
வீர மண்ணில் ;தமிழர் கூட்டம் ...
கோபம் கொண்டால் ;நாடே நடுங்கும் ...
கோழையாக கேலி செய்பவன் ;
உறவும் ,மரபும் ,மறந்த ஜடங்கள் ..
கோழை நடுங்க ;புழுதி பறக்க ,
முரட்டு காளை அவிழ்த்து விடுடா ...
மரபை புதைக்க சட்டம் வந்தாள் ;
நாடே வேண்டாம் ;தனியாய் வாடா ...
நீ போகும் பாதையெங்கும்
என் கால்கள் போகிறது ;
நீ பேசும் வார்த்தைதானே
என்னுள்ளம் கேட்கிறது..!
நடுஜாம நேரம் ஏனோ
ஒரு வெட்கம் வழிகிறது ;
அதிகாலைப் பொழுதில்கூட
என் தேகம் சுடுகிறது ..!
இதழ்களால் பேசிடு மலரே
என்வசம் நானில்லை மனமே ..!
***
குடையிருந்தும் மழையில் நனையும்
புது மறதி வருகிறது ;
யார்யாரோ என்னுடன் பேச
உன் முகமே தெரிகிறது..!
பல்லாயிரம் வார்த்தை பேசி
கண்ணாடியும் உடைகிறது ;
தலைவலியாய் யோசனை பெருகி
மனநோயும் விளைகிறது ..!
அலைகளை பூட்டுதல் சரியா
அழுவதும் சிரிப்பதும் கலையா ..!
***
உன் பார்வை பேசுவதெல்லாம்
உனை காண தானே என் மனம் ஏங்குது ...
உன் உருவம் காண என் விழி தேடுது ...
விடியாமல் நீளும் இரவும் இல்லை
யார் என்ன சொன்னால் என்ன அன்பே ;
உனை காண நானும் வருவேன் ...
நீ இன்றி நான் இங்கு வாழ்தாலுமே
உன் நினைவென்றும் அழியாதுடி
நான் கேட்ட அழகான கவியாவுமே
உன் இதழ் சிந்தும் அழகான வாரியாகுமே ....
என்ன இருந்தலும் நீ இன்று எனதில்லையே
நான் உயிர் வாழ என் உயிர் காதல் துணை போதுமே ...
......................மகிழ்ச்சி.........................
உன் நொடி பொழுதும் துணிவிருந்தால் ;
தன் தோல்வியிலும் வரும் மகிழ்ச்சி....
எவர் வெறுப்பதையும் நீ மறந்திருந்தால் ;
உன் மனதில் வரும் தினம் மகிழ்ச்சி....
சிலர் கடுஞ்சொல்லும் உன் செவிவந்து ; மதியோடு மறைந்துவிட்டால் ,
உன் அகம் முழுதும் சுக மகிழ்ச்சி....
துன்பம் அதை துரத்திவிட ;
துணிந்து நீயும் முயன்று நிற்க ,
இன்பம் அது தலை தூக்க ;
பொங்கி வரும் மன மகிழ்ச்சி ....
....................வாழ்க்கை...................
மடிசாஞ்சி நாம் பேசி
மாசக்கணக்காச்சி
மனசுக்குள்ள பூட்டி வச்ச ஆசநூறாச்சி
மண்ணவிட்டு வந்து இங்கு காசு சேத்தாச்சி
மனசுகுள்ள ஆசை எல்லாம் போட்டு தூத்தாச்சி
சொந்த பந்த கூட்டம் எல்லாம்
பேச்சோட போயிடுமோ !
தனிமையில வாழும் வாழ்க்க
பேறு என்ன தந்திடுமோ !!
போதும் போதும் இந்த வாழ்க்கை
தனிமையில வாடாத
சொந்த பந்தம் விட்டு புட்டு சொர்க்கம் தேடி ஓடாத ..
நண்பர்கள் (11)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

உதயசகி
யாழ்ப்பாணம்

அ பெரியண்ணன்
தருமபுரி,காமலாபுரம்

சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை
