வாழ்க்கை

....................வாழ்க்கை...................
மடிசாஞ்சி நாம் பேசி
மாசக்கணக்காச்சி
மனசுக்குள்ள பூட்டி வச்ச ஆசநூறாச்சி

மண்ணவிட்டு வந்து இங்கு காசு சேத்தாச்சி
மனசுகுள்ள ஆசை எல்லாம் போட்டு தூத்தாச்சி

சொந்த பந்த கூட்டம் எல்லாம்
பேச்சோட போயிடுமோ !
தனிமையில வாழும் வாழ்க்க
பேறு என்ன தந்திடுமோ !!

போதும் போதும் இந்த வாழ்க்கை
தனிமையில வாடாத
சொந்த பந்தம் விட்டு புட்டு சொர்க்கம் தேடி ஓடாத ..

எழுதியவர் : தீ .ஜெ.அகாஷ்வருண் (9-Jul-16, 8:02 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 474

மேலே