கையூட்டு

கடினமான வேலையெல்லாம்
கடந்து வந்த சிங்கம் தானோ
கையூட்டு பெற்றதனால்
கலங்கித்தான் போனதென்ன
தண்டனைக்குத்
தன் துணைவியையும்
மகள்களையும்
இழந்துதான் வேதனையோ
அல்ல
கையூட்டு பெற்றது தான் வேதனையோ
அறிந்து கொள்ளும் முன்பே தான்
காலன் வந்து கூட்டிச் சென்றானே

எழுதியவர் : சதீஷ் குமார் தங்கசாமி (9-Jul-16, 3:48 pm)
Tanglish : kaioottu
பார்வை : 172

மேலே