இறைவன் கூட பயப்படுவான்

வரம் கேட்டு
உயிரற்ற கல்லிற்கு
அர்ச்சனை அபிசேகம்
கடவுள்கள்
கோவிலுக்கு
வெளியே
பிச்சைப் பாத்திரம் ஏந்தி ...
பணம் தேடி
சில கல்வி நிலையங்கள்
இன்று..
புணமாய் எறிந்து கொண்டிருக்கிறது ஏழை வீட்டில் கல்வி...
நொடி பொழுதில்
நிகழும் மரணம் உனக்கும்
இதை அறியாமல் நீ என்ன
மனிதன் மனிதாபிமானமில்லா..
உயிர் வாழ திருடுகிறாய்
ஒரு உயிரை கொன்று
வேட்டையாடும் மிருகத்தை விடவா கொடியவன் நீ....
இதற்கேல்லாம்
உறுதுணையாய் இருக்கும்
சமூகம்...
உன் காலை வாறி விடும் ஒருநாள் ....அந்நாள் அசுத்தமில்லா சமுதாயம் கண்டு இறைவன் கூட பயப்படுவான் நம் உயிரை எடுக்க.....

எழுதியவர் : கிரிஜா.தி (9-Jul-16, 2:52 pm)
பார்வை : 112

மேலே