இன்றைய வாழ்க்கை

சுத்த தண்ணி மாசுபட்டு
கடலோட கலக்குது ..
கடல் நீரை சுத்தம் செஞ்சி
குடிநீரும் விக்கித்து ...
விவசாய நிலமெல்லாம்
கட்டிடமா மாறுது ...
கட்டிடத்தின் மாடியில
குட்டி தோட்டம் வளருது ..
மண்ணுக்கு உரம் போட்டு பூச்சியெல்லாம் சாவுது ..
மண்ணுல வெளஞ்சதெல்லாம்
பூச்சி மருந்தா மாறுது ...
இயற்கையை அழிச்சிப்புட்டு
அறிவியலும் வளருது ...
மனிதனோட ஆயுள் மட்டும்
படி படியா குறையுது ..