வரும் காலம் உன் கையில்
வா வா தமிழா ...
வா வா தமிழா...
நீ மறந்து கிடக்கும் தமிழ்
மறைகள் எல்லாம்
நினைவில் கொண்டு
எழுந்து வா வா ...
புதைந்து கிடக்கும்
நம் புதையல் கோடி
அதை மறைக்க துடிக்கும்
எதிரி மோதி
நம் தலைமுறை திறமை
திறப்போம் வா வா ...
அரசியல் வேண்டாம்
சாதியும் வேண்டாம்
சங்கங்கள் வைக்கும்
நடிகனும் வேண்டாம்
தமிழால் இணைந்த நம்
உணர்வே போதும்
நம் கூட்டம் கண்டு
உலகம் வியக்கும் ...
ஆதி தமிழன் உலகம் ஆண்டான்
வாழும் தமிழன் ஆள்வது என்றோ ???

