அல்லல் பட

அல்லல் பட


வம்பில் மாட்டிய வாத்தியாருக்கு
வந்தது ஆண்டு சோதனை
படித்த மாணவர்கள்
கை கோர்த்த மறுபரிசீலனை !
ஏனோ
பரிட்சையில் வரவேண்டியதை
முன்னமே சொல்லிக் கொடுக்க
மாணவர்கள் பெற்ற புள்ளி
வைத்தது வேட்டு !

வகுப்பு ஆசிரியர்
வசதியாய் சொல்லிக் கொடுக்க
வாய்த்த மாணவர்கள்
சாதனை பல பேர்
வருந்துவதற்கு ஒன்றும் இல்லை
வழங்கிய வாய்ப்புக்கு
நன்றிக் கடன் கட்டியது
நம்பிக்கை பாத்திரங்கள்
நல்ல மார்க்கோடு
நல்ல பெயர் பெற்றுத்தர..
இப்போ பரிட்சையை
யார் எழுதியது
ஆசிரியரா !
மாணவர்களா ?
கேள்வியை
முன்னால் கேட்டால் என்ன ..ஏனோ
பரிட்சையில் கேட்க
விடை என்ன
தப்பாக இருக்குமா ?
மூன்று தவணைக்காலம் படித்தது பரிதவிக்க
பதிலோ இரண்டி மணி நேரம் அல்லல் பட !

எழுதியவர் : மு.தருமராஜு (17-Mar-25, 2:29 pm)
Tanglish : allal pada
பார்வை : 2

மேலே