கர்மவீரர் பிறந்தநாள்

**********************
விருதுநகர் வார்த்தெடுத்த
தென்னகத்தின் காந்திஜி
உடும்புநிகர் உறுதிபடைத்த
திராவிடத்தின் நேதாஜி
நேருக்குநேர் நிலமைகளறிந்த
தமிழகத்தின் நேருஜி
மூன்று–ஜி-களும் கலந்தகலவையே
கர்மவீரர் காமராஜி!

பார்போற்றும் கல்வியை
பாமரனுக்கு வழங்கிய படிக்காத பாரதி
பாமர ஜாதிமேல் பாசாங்கு காட்டாது,
பாசம் காட்டிய பார்த்தசாரதி

பாமரச்சிறுவன் சொல்கேட்டு
பகலுணவுப் படைத்த பரமஜோதி
பள்ளிச்சீருடை திட்டத்தால்
ஏற்றத்தாழ்வு கலைந்த சமதர்மவாதி

குலக்கல்வி திட்டத்தை கொண்டுவந்த
மூதறிஞர் ராஜாஜியை
கலகம் விளைவிக்கும் திட்டமென
எதிர்த்தாரே நாவறிஞர் காமராஜ்

பள்ளிக்கல்வி இயக்குனர் சுந்தரவடிவேலரை
காரில் ஏற்றிக்கொண்டு
கடைகோடி கிராமங்களிலும்
பள்ளிகள் திறந்தாரே பாமரநாயகர்

ஓராசிரியர் நியமனத்தால் ஓராயிரம்
இடங்களை நிரப்பிய சாதூர்யவான்
முதியோர் கல்விகற்க இராப்பாடசாலை
திறந்த சாமன்ய சாமார்த்தியவான்

பச்சைத்தமிழனென ஈரோட்டு தந்தையால்
பாரட்டப்பட்ட சத்தியவான்
நிர்வாகத்திறமையால் கிங்மேக்கர் என
பெயர் பெற்ற பாமர சக்திமான்

பதவிகள் பறிபோனப்பின்னாலும் அயராது
பணியாற்றியதால் ‘பாரதரத்னா’ பெற்றார்..!
உதவிகள்கேட்டு உறவுகள் யார் வந்தாலும்
சர்க்கார் சொத்து, சல்லி பெறாதென்பார்!

இறுதிவரை எளிமையாய் வாழ்ந்த பெருந்தலைவர் இப்பாரினில் யாரெனில்..?
பள்ளிச்செல்லும் குழந்தையும் பாதிவழியில் நின்று, உரக்கச்சொல்லும் காமாட்சி என்கின்ற காமராஜ் என்று..!

#நிறைமதி _#மணிமாறன்

15/7/17

எழுதியவர் : இரா.மணிமாறன் (15-Jul-17, 3:11 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 81

மேலே