மௌனக் கனவேந்தி தொந்திரவு செய்வதேன்

நெஞ்செனும்நீ ரோடையில் நீந்திடும் எண்ணத்தில்
மஞ்சள் நிறவானின் மௌனக் கனவேந்தி
அந்திமா லையிலே அன்பினில் வந்துநித்தம்
தொந்திரவு நீசெய்வ தேன்
---இரு விகற்ப இன்னிசை வெண்பா
நெஞ்செனும்நீ ரோடையில் நீந்திடும் எண்ணத்தில்
மஞ்சளெழில் வானின் நினைவேந்தி -- கொஞ்சிடும்
அந்திமா லையிலே அன்பினில் வந்துநித்தம்
தொந்திரவு நீசெய்வ தேன்
-----இரு விகற்ப நேரிசை வெண்பா