பூமியை காத்திடுவோம்
காலநிலை மாறிப்போச்சி.
காடு,மேடு காஞ்சி போச்சி.
மழைஇன்றி தவிக்கின்றோம்.
இறைவனை அழைக்கின்றோம்.
செயற்கை வாழ்க்கை வாழும் மக்களே,
நின்னுகேளுங்க...
இயற்கையை எதிர்த்திட்டா அழிவுதானுங்க...
காட்டுக்குள்ள வீடுகட்டி வாழ்ந்திருந்தோம் அப்போ...
வீட்டுக்குள்ள விவசாயம் செய்யும் நிலை இப்போ...
சுத்தமான. பூமியை தந்தது நம்ம. சாமிதான்.
.வத்திப்போச்சி செல்வ வளம்,
நம்ம சந்ததிங்க பாவம்தான்.
மாடிமேல. மாடி வச்ச. மானிடனே நில்லுங்க...
கோடி..கோடி செல்வம் சேர்த்து என்னபயன் சொல்லுங்க...
சுத்தமான காத்து..
வத்தாத தண்ணி..
நோயில்லா வாழ்க்கை ...
இதை எங்ககேட்டு பார்க்க..
வீட்டுக்கு வீடு மரம் வளர்ப்போம்,
நாடு செழிக்க நாம் உழைப்போம்.
மாரியது இல்லை என்றால் பாரே பாலையாய்...
மாறிவிடு மானிடா ...மாற்றிவிடு சோலையாய்..
சுத்தமான பூமியை விட்டுவிட்டு போவோம்..
கத்தும் கடல் வற்றும்வரை நம் சந்ததிங்கவாழும்.
ஆறறிவு படைத்த மனிதா சிந்தித்துபாரு...
ஏரோட்டும் வயல் இல்லாட்டி நமக்கு இல்ல சோறு...