காதல்
கொம்பு தேனுக்கு அலைந்தானாம்
முடவன் , அதுபோல் சிலர்
காதலைத் தேடி அலைவது
தேடி அடைவதல்ல காதல்
அது இரு ஜோடி விழிகள்
பார்வையின் பரிமாற்றத்தில்
பார்த்த அக்கணமே உருவாவது
பார்த்த இரு மனங்கள் சங்கமிக்க