விழுப்புண் வீரர்கள்
உள்ளுக்குள் தோன்றிடும் உணர்வுகளை அடக்கி,
எல்லைக்குள் ஊடுருவும் அந்நியனை அடக்கி..
வெள்ளைபனிமலையில்,
கொல்லும் குளிரில்..
உறங்காத விழியோடு,உலவிடுவோம் வெண்மதியாய் ...
பகல் இரவு பாராமல் யுத்தங்கள் நடக்கும்.
துயில் கொள்ளமுடியாது,
சத்தங்கள் வெடிக்கும்..
இன்று,
எதிரியின் சதியில் எரிந்து போனோம்.
எதிரியின் சதியாலே எரிந்து,உயிர் பிரிந்தது.
கதறிஅழும் கண்ணீரில் கடல் அது நிறைந்தது..
துச்சமென உயிரைஎண்ணி, நாட்டின்
உச்சிக்கு நாங்கள் வந்தோம்.
எச்சி அவன் தீய. செயலால்
இன்னுயிரை இன்று தந்தோம்.
வச்சிஇனிபார்க்காதே...
பிச்சிஎடு தீயவனை...
விழுப்புண்பட்டு நாங்கள் வீரமரணம் அடைந்தோம்...
எழுந்து வா எம்இனமே ..நாம் இறக்கத்தான்பிறந்தோம்....