காவிய கலைஞரே
இதயத்துக்குள்ளே உனக்கோர் இடம் வைத்தேன்.
உதயசூரியனே உன் கவியில் எனை மறந்தேன்.
மரணம் உனக்கில்லை என்றுநாங்கள் மகிழ்ந்திருக்க..
ரணமான செய்தி ஒன்று
இதயத்தை துளைத்தெடுக்க..
விழிகொட்டும் கண்ணீரை முடியவில்லையே தடுக்க.
வழிஇன்றி தவிக்கிறோம்
எழுந்துவா துயர் துடைக்க.
காலனுக்கும் காதலா
நோய்வடிவில் உனைக்கொ(ள்ள)ல்ல.
ஞாலத்தில் யாருமில்லை
ஞாயிரே உனைவெல்ல.
வங்க கடலோரம்
துயில் கொள்ளபோகிறாய்.
சிங்கத்தமிழனே,நீ
சரித்திரமாய் ஆகிறாய்.