நடிக்கின்றேன் நானடா
பாழடைந்த வீடாக நான் இருந்தேன் அன்று.
வாழ்வதற்கு எனைத்தேடி நீவந்தாய் இன்று.
சேருக்குள் நீர்போல சேரஆசை உனக்கு.
சேர்வதற்கு ஒருவழியும் தெரியவில்லை எனக்கு.
வேர்விட்ட செடி ஒன்று
கார்மழைக்கு காத்திருக்க.
புயல் எனவே பூகம்பம் புகுந்து
அதன் வேர் அறுக்க..
ஆசைக்கனவெல்லாம்
மடிந்தது மண்ணோடு.
வேசம் கலைக்காமல்
நடிக்கிறேன் உன்னோடு...