கடைபொருளா காதல்

காதல் என்ன கடைபொருளா?
காசுகொடுத்து வாங்கிட.
வேதம் போல அவள் பெயரை
ஓதும் இதயம் ஏங்கிட.
காற்றைப்போல அவள் எங்கும்.
அவள் நினைவாலே என்
உயிர் இயங்கும்.
பூட்டி வைக்க முடியவில்லை.அவள்
பூவா, புயலா தெரியவில்லை.
விழிகாட்டி காதல் சொல்கின்றாள்.
எனைவாட்டி வதைத்து கொல்கின்றாள்.

எழுதியவர் : கு.தமயந்தி (13-Jun-17, 7:33 pm)
பார்வை : 82

மேலே