எனது உலகம் கவிதை உலகம்
என் கவி உலகத்தில்...
என் கவிதை ... தாளில் அரங்கேறினால்
விண்மீன் அத்தனையும்... அழையா விருந்தாளிகள்...!
மழைவில் நிச்சயம்... அரங்கின் தோரணம்...!
வானின் நீலம்... அது
இரவு வந்தால் தீர்ந்துவிடும்...!
என் பேனா சுரக்கும் நீலம்... அதற்கோ
ஐபிஎல் ஏலம் தினம் நடக்கும்...!
நிலவு... உலகம் சுற்றும் வாலிபன் தான்...!
மாதம்பாதி... என்வீட்டு மொட்டைமாடி தோழன் தான்...!
கடந்த காலம் நடந்தே சென்று
கரிகாலனாய் வாழ்ந்திடுவேன் ...!
எதிர் காலம் இன்றே சென்று
ஏலியனையும் பார்த்திடுவேன் ...!
நிஜத்தில்...
டைம்மெசின் என்னவென்று...
தெரியா பொறியாளன் நான் ...?
இப்படி ஓர் உலகம்...
இத்தனை நாள் மறந்தேன் நான்...!
இன்று தான் தேடி எடுத்தேன் நான்...!
தினம் அதை பகிர்கிவேன்... உங்களோடு நான் ...!