அமேசான்

அமேசான் 🔥

இந்த பூமியின் ஆக பெரிய அதிசயம், அழகிய அமேசான் மழை காடுகள்.

பூமி தாயின் நுரையீரல்
அமேசான் அற்புத காடுகள்.

பூர்வகுடி மக்கள் ,
பல்லாயிரகனக்கான உயிரினங்கள்
லட்சக்கனக்கான மூளிகை தாவர வகைகள் கோடிக்கனக்கான மரங்கள், விலைமதிக்க
முடியாத கனிமவளங்கங்கள் என
தன்னுள் பல அற்புதங்களை கொண்ட அதிசய பொக்கிஷம் தான் அமேசான் காடுகள்.

மனிதனே மனிதனுக்கு எதிரி
மனிதனே இயற்கைக்கும் எதிரி.
காடுகளை அழித்து விவசாயம் செய்ய துடிக்கும் கார்ப்பரேட் சுயநலவாதிகளால் அமேசான் காடுகளில் பயங்கர காட்டு தீ.
எங்கும் பரவம், காட்டு தீயை
கட்டுபடுத்த முடியாத
வேடிக்கை பார்க்கும்
கையாலாகாத வல்லரசு நாடுகள்.

கார்ப்பரேட் மனித கலாச்சாரத்தை மட்டும் அழிக்க வில்லை,
மனித வாழ்வாதாரமாக இருக்கும் காடுகளையும் அழிக்கிறது.

இருபது சதவிகித பிராண வாயு உலகம் முழுவதும் இருக்கும் மனித உயிர்களுக்கு தரும் அமேசான் காடுகளை அழிப்பது
மனிதன், மனிதனுக்கே வெட்டும் மிக பெரிய சவ குழி.

ஓ மனிதா!
நீ அன்றாடம் வெளிபடுத்தும் நச்சு காற்றை அமேசான் காடுகள் எந்த அளவு தன்னுள் இழுத்து கொண்டு , உன்னை காபாற்றி கொண்டிருக்கிறது என்று உனக்கு தெரியுமா?

எங்கோ காட்டு தீ எரிகிறது
எனக்கேன்ன மனகவலை
என்று மெத்தனமாக இருந்து விடாதே
எங்கிருந்தோ தான் எய்ட்ஸ் என்ற கொடிய நோயும் வந்தது.
மறந்துவிடாதே.

ஏற்கனவே ஓசோன் படலத்தில் வல்லரசுகளின் அதீத விஞ்ஞான வளச்சியால் நிறைய ஓட்டை .
அதனால் வானிலையில் எதிர் பாராத பல மாற்றங்கள்.
அமேசான் காட்டையும் மானுடம்
அழித்தால், 2060 மேல்
மனிதனின் பூமி பந்தில் வாழ்வதே மிக பெரிய கேள்வி குறியே.

கண்ட பதிவுகளை
சமூக வளைதளங்களில் வாயிலாக பதிவு செய்வதை தவிர்த்து,
முதல் வேலையாக
அமேசான் காடுகளை காட்டு தீயிலிருந்து காப்போம், மீட்போம், என பதிவிடுவோம்.
வல்லரசுகள் ஒருங்கினைந்து இந்த காரியத்தை செய்ய உறக்க குரல் கொடுப்போம். இயற்கை பொக்கிஷத்தை காப்போம்.

- பாலு.

எழுதியவர் : பாலு (24-Aug-19, 10:05 pm)
சேர்த்தது : balu
பார்வை : 296

மேலே