இயற்கை

மாமரக்கிளையில் குயில் கூவ
அது என் காதில் குழலோசையாய்க் கேட்க
எது நிஜம் எது மாயம் என்று திகைத்தேன் நான்
குயில் நான் பார்க்கின்றேன் நிஜம்
குயில் பாட கண்டேன் நிஜம் ஆனால் அது
என் காதில் கண்ணனின் குழலோசையாய்க் கேட்டதேன்
குயிலோசையில் கண்ணன் புகுந்தான் அது
அமுத கீதமாய் மாறி என் காதில் ஒலித்தது
அதுவே நிஜம் என்று நான் அறிந்தேன்
'கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா
நிந்தன் கீதம் இசைக்குதடா நந்தலாலா'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (21-Aug-19, 6:09 pm)
Tanglish : iyarkai
பார்வை : 915

மேலே