வெட்கத்தில் தலை கவிழ்ந்த பூக்கள்

வெட்கத்தில் தலை கவிழ்ந்த பூக்கள் !

யானை நிற மேகங்கள்
செக்க சிவந்த நிலவை
மறைத்து வைக்க..!

முடியாமல் அதன்
இடுக்கு வழியாய்
சிதறி பாயும் செங்கதிர்கள்
வானத்தில் பூக்கோளமாய்
காட்சி தர

அந்த வர்ண ஜாலத்திற்கு
ஈடு கொடுக்க முடியாமல்
மின் மினியாய் மிளிர்ந்து
பார்க்கும் நட்சத்திர
கூட்டம்

என்னையும் பாரேன்
எல்லோரையும்
அழைக்கிறது. !

அவ்விரவில் !
வீசிய மெல்லிய காற்று
பூக்களை தொட்டு தழுவி
கூடலுக்கு அழைக்க

அந்த பூக்களோ !
வானத்தில் தெரியும்
சிதறிய பூக்கோளத்தின்
வெட்கத்தில் தலை கவிழ்ந்து
காற்றின் அழைப்புக்கு
இடம் கொடுக்க
மறுக்கிறது.

வீசும் காற்றோ
அதன் விரக தாபத்தில்
பூக்களை தொட்டு
தடவி

அந்த இடம்
முழுவதும் மணம் வீசி
பரவசப்படுத்துகிறது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (21-Aug-19, 9:22 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 217

மேலே