வர்ணஜாலம்

கவிதை

வர்ணஜாலம் !
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

கிணற்றுக்குள்
நிறைந்த நீருக்குள்
விரிந்த வானம்
விண்ணில் விளையாடும்
கருமேகக் கூட்டங்கள்
குளிர்ந்த சூரியன்
கிணறு விளிம்பில்
காணும் மரக்கிளைகள்
எட்டிப் பார்த்தபோது
என் முகம்!

கிணற்று நீரில்
சிறுவன் போட்ட
சிறுகல் விழுந்துபோது
சூரியன் கருமேகங்கள்
வானம் மரக்கிளைகள்
என் முகம்தான்
நீர்த் துளிகளாக தெறித்தன!

சிறுகல் மூழ்கியபின்
அமைதியான நீரில்
மீண்டும் கிணற்றுக்குள்
நீருக்குள் வர்ணஜாலம் !

கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

எழுதியவர் : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (20-Aug-19, 6:17 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 168

மேலே