பாவி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பாவி
இடம்:  மிச்சிகன் அமெரிக்கா
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Feb-2017
பார்த்தவர்கள்:  2971
புள்ளி:  125

என்னைப் பற்றி...

எனது இரண்டாம் புத்தகம் , முதல் நாவல் , "எல்ஜராது" என்ற பெயரில் amazon US தளத்திலும் , இந்தியா தளத்திலும் கிடைக்கிறது . Scientific Thriller வகையில் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது .

எனது முதல் புத்தகம் சிறுகதை தொகுப்பாக "8 திசை " என்ற பெயரில் Amazon Kindle வடிவத்தில் amazon தளத்தில் வெளிவந்துள்ளது .

எனது படைப்புகளை படித்து , தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் வணக்கங்களும் ,நன்றிகளும் .

எனது இந்த முயற்சிக்கு ஆதரவு தந்து , தங்களது நண்பர்களிடமும் பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன் .

மறக்காம amazon இல் , உங்களது கருத்துக்களை பதிவிடுங்க .

புத்தகங்களின் மீது தீராக் காதல் நினைவு தெரிந்த வரையில் ஆனந்த விகடனின் நகைச்சுவை துணுக்குகளில் ஆரம்பித்தது , பின் சிறுவர்மலர் , அம்புலி மாமா , இரும்புக்கை மாயாவி , சிந்துபாத் , அலிபாபா , 1001 அரேபிய இரவுகள் என வளர்ந்து , விவேக் -ரூபலா (ராஜேஷ்குமார் ), கணேஷ் -வசந்த் (சுஜாதா), பரத் -சுசிலா (பட்டுக்கோட்டை பிரபாகர் ), நரேன் -வைஜேந்தி (சுபா ) என படிக்க ஆரம்பித்து , சுஜாதாவின் ஆளுமைக்கு ரசிகனாகி , சுபாவின் தன்னிலை விளக்கக் கதைகளை ருசித்து , சிறிது காலம் தேவிபாலாவையும் ,மாந்த்ரீக கதைகள் பக்கம் ஒதுங்கி (பாக்யா புத்தகத்திலும் , இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்களிலும் ), பின் காபியையும் , ஜூஸ்யையும் கலந்தார் போல பாலகுமாரனும் , ரமணிச்சந்திரனும் பிடித்துப் போனது .பத்தாம் வகுப்பு விடுமுறையில் கல்கியும் , சாண்டில்யனும் அறிமுகமாக வாள் சுற்றிக் கொண்டு ஒரு கனவுலகில் இருக்க ஆரம்பித்து , தமிழுக்கு போதாத காலம் கவிதை எழுத ஆரம்பித்தேன். (அது கண்ணதாசனின் எழுத்துக்களை படிக்க ஆர்மபித்த நேரம் .) பின் அது வாலி , வைரமுத்து , அப்துல் ரகுமான் , என போய் வந்தது .rnrnபெங்களூரு நாட்களில் ஆங்கில புத்தகங்களின் அறிமுகம் , ஹாரி பாட்டர் இல் தான் முதலில் ஆரம்பித்தேன் , பின் அது கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுத்து , sidney shelden , lord of rings , micheal critchon , jeffrey archer , john grishim , david baldacci , harrold robbinson , Lee child , brent weeks (prism novels ) , Stephenie Meyer (Twlight saga ), Christopher Paolini (Eragon series ), Robert jordon (wheel of time ) , george RRmartin (game of thrones ) , Brandon சண்டெர்சன் (Bridgemen -kaladin ) , patrick rothfuss (Kevoth ) ,Joe Abercrombie (First Law series ) அப்படியே நிறைய பெயரே நியாபகம் இல்லாத vampire , warewolf என supernatural நாவல்களை படித்து ஆயிரம் ஆயிரம் வாழ்க்கைகளை வாழ்ந்து குழம்பி , கூட இருப்பவர்களையும் குழப்பி rnrnஇப்போது தான் அறிவு வந்து தமிழ் சங்க இலக்கியங்களையும் , தமிழ் இலக்கணத்தையும் படிக்க ஆரம்பித்திருக்கிறேன் . CIT யில் BSC Computer Technology முடித்து , தட்டு தடுமாறி விப்ரோ மூலம் பிட்ஸ் பிலானியில் MS software Engineering முடித்திருக்கிறேன் . IT யில் பதினாறு வருட வாழ்க்கை, கொஞ்சம் கொஞ்சமாக வேலை சலிப்பு தட்ட ஆரம்பித்திருக்கிறது .தொழில் துறையில் தொபுக்கடீரென்று குதித்து விடலாம் என ஆசை பார்க்கலாம் . எனது blog http://paavib.blogspot.com/ , தொடர்புகொள்ள மின்னஞ்சல் முகவரி paavib @gmail .com

என் படைப்புகள்
பாவி செய்திகள்
பாவி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Apr-2023 1:25 am

கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன் (1926 ம் ஆண்டு ) Geroge Samuel Johnson என்பவரால் எழுதப்பட்டது " Richest Man in Bobylon " என்ற இந்த சிறிய புத்தகம் . புத்தகம் சிறிதானாலும் இதில் உள்ள கருத்துக்களுக்காக உலகம் முழுவதும் தனி மனித நிதி மேலாண்மைக்கும் , திட்டமிடலுக்கும் மிகச் சிறந்த புத்தகமாக இது பொருளாதார வல்லுநர்களால் பரிந்துரைக்கப்படுகிறது .

அப்படி என்ன சிறப்பு என்பதை தெரிந்துகொள்வதற்கு , ஏறத்தாழ 8000 ஆண்டுகளுக்கு முன் இருந்த பாபிலோன் நகரத்துக்கு நாம் செல்ல வேண்டும் (இன்றைய இராக் தலைநகர் பாக்தாத் நகருக்கு அருகில் உள்ள "ஹில்லா " , அன்றைய பாபிலோன் ) . பாபிலோனின் தொங்கும்தோட

மேலும்

பாவி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jun-2022 11:45 pm

ஏதேனும் ஒரு பத்திரிகையில் , குறுக்கெழுத்து போட்டி நிறைவு செய்த்து அனுப்பியதற்கோ, வாசகர் கடிதமாகவோ , நகைச்சுவை துணுக்காகவோ ஏதாவது வகையில் எனது பெயர் ஒரு மூலையில் வந்து விடாதா என்று ஏங்கிய காலங்கள் உண்டு , அந்தக் கனவு கனவாகவே போய்விடும் என்றுதான் நினைத்திருந்தேன் .

முதன் முதலில் மிச்சிகனில் இருந்து வெளிவரும் மிச்சிகன் தமிழ் சங்கம் நடத்தும் கதம்பம் இதழில் "தமிழ் தொலைக்காத தலைமுறை நாங்கள் " என்ற தலைப்பில் நடந்த கவிதைப் போட்டியில் தேர்வு பெற்று எனது கவிதை பெயருடன் வந்தது . அதற்கே அளவில்லாத ஆனந்தம் அடைந்தேன்

பின் பெட்னா விழா 2018 சிறப்பு இதழில் எனது கட்டுரை "உயிராயுதம் " வெளிய

மேலும்

பாவி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2022 1:46 am

ஜனவரி 2020 - கொரோனா சீனா தாண்டி பரவ ஆரம்பித்திருந்த நேரம் . என்னென்ன மாதிரியான கொள்ளை நோய்கள் உலகில் வந்திருக்கின்றன என தேடிப் பார்க்கும் போது கண்ணில் பட்டது படை வெட்டுக்கிளிகள் . எகிப்தை தாக்கிய 10 பெரும் கொள்ளை நோய்களுள் ஒன்றாக “Book of Exodus” இல் சொல்லப்பட்டிருக்கும் இவை , பைபிளிலும் , குரானிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் அளவு வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பகுதிகளில் மக்களை தாக்கியிருக்கிறது

. இந்த படை வெட்டுக்கிளிகள் எப்படி உருவாகிறது , தன்னை எப்படி மாற்றிக் கொள்கிறது ,கூட்டாக எவ்வாறு செயல் படுகிறது என்பதை படித்ததனில் உண்டான வியப்பில் உருவானது இந்த நாவல் .

"Scientific Thriller "-

மேலும்

பாவி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jul-2021 1:04 am

மகள் பிறந்ததும்

உதயமாகும்

தந்தையின்

பிறப்பு

மகள் வளர்ந்து

உலகம் பார்க்க

பிறந்த கணத்தில்

உறையும்

தந்தை !



-பாவி

மேலும்

பாவி - பாவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jun-2020 8:21 am

மேலும்

ஏரிக்கரை ஓரம் மாலை மங்கும் நேரம் மிச்சிகனின் அழகிய மாலைப்பொழுது 24-Jun-2020 7:41 am
பாவி - பாவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jun-2020 6:12 am

மேலும்

மழை மண்ணை சந்திக்க வானம் விட்டு மேகமாய் திரண்டு வர தாலாட்டும் மரங்களுக்கு தாளம் போடும் அந்தி நேர தென்றல் காற்று - மிச்சிகன் பொழுதுகள் 24-Jun-2020 7:41 am
பாவி - பாவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2020 7:39 am

வானம்தனை
மேகம்சூழ

மேலும்

வானம்தனை மேகம்சூழ அரவமில்லா தனிமைதனில் புரிபடும் ஏகாந்த நேரத்தின் மௌனமொழி - மிசிகன் பொழுதுகள் பாவி 24-Jun-2020 7:40 am
பாவி - பாவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jan-2020 12:50 am

இட்லியும் குடல்கொழம்பும்
நெய்யில் சுட்ட தோசைகளும்
அரைச்சு வைத்த
மசாலாவில்
பொரித்து வைத்த
கோழிக்கறியும்

மறுக்க மறுக்க
நினைத்தாலும்
கொதிக்க கொதிக்க
ஆட்டுக்கறியும்
குண்டாவை தூக்கிப்போட்டு
சிறிய அண்டாவில்
மிளகு ரசமும்
கெட்டித் தயிரும்
நெத்திலி மனும்
கூடவே வரும்
பிரியாணியும்

அவ்வப்போது
லட்டுகளும் , ஜிலேபியும்
அல்வாவும் , பால்கோவாக்களும்
நாவின் இனிப்பு நீங்க
பஜ்ஜி போண்டாக்களும்
அதற்கு தொட்டுக்கொள்ள
சட்டினி சாம்பாரும்
பின்பு தரமான
காபியும் , டீயும்

நடைப்பயிற்சியில் மிக்சரும்
வாய்ப்பயிற்சிக்கு பக்கோடாவும்

இழுத்து வைத்தாலும்
தினம் சுவைக்க வைத்தாலும்
கொண்ட கொள்கையி

மேலும்

நன்றிங்க 25-Feb-2020 7:00 pm
semmmma........ 25-Feb-2020 9:56 am
பாவி - பாவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Aug-2017 8:07 pm

பெரியார்- அம்பேத்கர் படிப்பு வட்டத்தில் (அமெரிக்கா )- பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் "இன்றைய தமிழகமும் மதவாத அரசியலும் " என்னும் தலைப்பில் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவு .

இஃது தமிழகத்தில் இருந்து பல்வழி அழைப்பின் மூலம் பேராசிரியர் தொடர்பு கொள்ள, july 21 2017 , திருவள்ளுவர் ஆண்டு 2017 ஆடி - 5 இல் நடைபெற்றது .

மதவாதம் அல்லது மதச்சார்பின் வரலாற்றில் இருந்து தொடங்கி , எப்போது மத மோதல்கள் தமிழ்நாட்டுக்கு
வந்தன , இதில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு , அதற்கான காரணங்கள் , மதவாதம் என்பது எத்தனை கொடிய நோய், அது பரவுவதனால் ஏற்படும் வீழ்ச்சி , முதலியவ

மேலும்

பெரியார் சொத்து கபளீகரம் செய்து அழிக்கப்படும் வரை எவனாவது பெரியாரை போற்றிக் கொண்டேதான் இருப்பார்கள். பெரியாரின் தம்பிகள்தான் இன்று இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் கொண்ட ஒரே குடும்பம் பெரியார் மாபெரும் பொய்யன். பெரியார் தமிழ்நாட்டின் அன்றைய காங்கிரஸ் பொருளாலர். அவர் கட்சிப் சுருட்டிட காங்கிரசில் இருந்து துரத்தி யடிக்கப் பட்டார்.. பெரியாரை கைதூக்கி விட்டவர் பெரியாரின் குமாஸ்தா அண்ணாத் துரை. ...தான் படித்த கால்ட்வெல்லின் கண்டுபிடிப்பான திராவிடத்தை அண்ணாத்துரை periyaarukkur சொன்னார். Home land பத்திரிக்கையில் எழுதவும் ஆரம்பித்தார். பெரியாரின் குறிப்புகள் தொண்டுகள் . ஒன்று பொய் அல்லது மிகைப் படுத்தி சொல்லப் பட்டவை. பெரியாரை வளர்த்தவர் காமராஜர். காமராஜர் ஜெயிக்க பெரியாரை ஆதரித்தார். ...இருந்தாலும் பார்ப்பன மற்றும் மததுவேஷத் திற்காக ஜெயிலில் அடைக்க்பட்டார். . பெரியார் பற்றிய விஷயங்களை பொய்யென்று பலரும் நிரூபித்து இருந்தும் பெரியாருக்கு போற்றி பாடும் கும்பலை விலைக்கு வாங்கி உயிர்ப்பித்து கி வீரமணியும் சுப வீரபாண்டியனும். காரணம் பெரியார் பிச்சை எடுத்து சேர்த்த சொத்து கணக்கில்லாமல் இருக்கிறது அல்லவா. எனக்குத் தெரிந்து பெரியார் கூட்டத்தில் துண்டேந்தி ஒருபக்கமும், மறுபக்கம் உண்டியலையும் குலுக்கி பிச்சைக் காசு சேர்ப்பார்கள். .. அன்றைக்கு டிவி இல்லை . இருந்திருந்தால் பெரியாராவது மண்ணாவது. பிச்சைகாசில் பெரியாருக்கு ஒரு பெரிய தொகை கொடுப்பார்கள் கார் வாடகை சாப்பாடு எல்லாமும் போக பந்தல் கரண்ட்டு செலவு. இன்னும் மீந்ததை மற்றவர் பங்கு போடுவர். அன்று அண்ணா மற்றைய எல்லாரும் அந்த வருமானத்தை கொண்டு அடுப்பெரிய பொங்கி சாப்பிட்டவர்கள் தா. ன் உண்மையை இன்று மறைக்கும் கோடீஸ்வரர்கள். இன்னும் நம்பும் அப்பாவி இருக்கத்தான் செய்கிறார்கள் 01-Dec-2022 1:18 pm
பாவி - பாவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Aug-2017 7:15 pm

தமிழ் சங்கத்தின் "கோடை கொண்டாட்டம் " நிகழ்ச்சிக்கு தமிழ் மக்கள் பெரும் திரளாக திரண்டு வந்து சிறப்பித்தனர். அறநூறுக்கும் மேற்ப்பற்றோர் பங்கேற்ற நிகழ்ச்சி maybury state park இல் நடைபெற்றது . பெரும்பாலான வட்டாரத் தமிழ்ச்சொற்களை கேட்க முடிந்தது மிக்க மகிழ்ச்சி .

ஒருங்கிணைப்பாளர்கள் நுழைவாயிலிலேயே வருபவர்கள் பதிவு செய்யவும் , தமிழ் சங்கத்தின் உறுப்பினர் கால அளவை புதுப்பித்துக் கொள்ளவும் , புதிதாக சேரவும் அரங்கங்களை அமைத்திருந்தனர். தமிழ் சங்கத்தின் செயல்பாடுகளையும் , உறுப்பினர்களுக்கு தரப்படும் சலுகைகளையும் விளக்கும் தட்டிகளை வைத்திருந்தது நல்ல உத்தி.

11.30 க்கு தொடங்கப்பட்ட

மேலும்

நன்றிங்க வேலாயுதம் ! 08-Aug-2017 7:46 pm
போற்றுதற்குரிய பதிவு உலகம் எங்கும் நம் பாரதி கண்ட கனவை நனவாக்குவோம் வாழ்க தமிழ் வாழ்க தமிழர்கள் 08-Aug-2017 7:42 pm
பாவி - பாவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jul-2017 1:28 am

வைகறைப் பொழுது
நனையும் பூமி
குடை பிடித்துக்கொண்டே
நடந்தேன்!
மகளும் மனைவியும்
உடன் இருந்திருந்தால்
மழை பிடித்திருப்போம் !!!

-பாவி

மேலும்

நன்றிங்க !!!! 21-Jul-2017 6:47 pm
அழகான வரிகள்..வாழ்த்துக்கள் 21-Jul-2017 11:19 am
பாவி - பாவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jul-2017 1:08 am

மனனம் செய்து
வாந்தி எடுத்து
பட்டம் பெற்று
பண்பை மறந்து
பணத்தை பெருக்கி
அறிவைத் தொலைத்து
திரைகடலோடி
சாதியம் தேடும்
மனம் சுறுக்கிகள் !!!

-பாவி

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்
வாசு

வாசு

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (5)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

வாசு

வாசு

தமிழ்நாடு
யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்
மேலே