ஊக்கமது கைவிடேல்

இட்லியும் குடல்கொழம்பும்
நெய்யில் சுட்ட தோசைகளும்
அரைச்சு வைத்த
மசாலாவில்
பொரித்து வைத்த
கோழிக்கறியும்

மறுக்க மறுக்க
நினைத்தாலும்
கொதிக்க கொதிக்க
ஆட்டுக்கறியும்
குண்டாவை தூக்கிப்போட்டு
சிறிய அண்டாவில்
மிளகு ரசமும்
கெட்டித் தயிரும்
நெத்திலி மனும்
கூடவே வரும்
பிரியாணியும்

அவ்வப்போது
லட்டுகளும் , ஜிலேபியும்
அல்வாவும் , பால்கோவாக்களும்
நாவின் இனிப்பு நீங்க
பஜ்ஜி போண்டாக்களும்
அதற்கு தொட்டுக்கொள்ள
சட்டினி சாம்பாரும்
பின்பு தரமான
காபியும் , டீயும்

நடைப்பயிற்சியில் மிக்சரும்
வாய்ப்பயிற்சிக்கு பக்கோடாவும்

இழுத்து வைத்தாலும்
தினம் சுவைக்க வைத்தாலும்
கொண்ட கொள்கையில்
குன்றாமல் நின்று
இளைத்தே தீருவேன்
உடல்
குறைத்தே மாறுவேன்
ஊக்கமது கைவிடேல்

-பாவி

எழுதியவர் : பாவி (28-Jan-20, 12:50 am)
சேர்த்தது : பாவி
பார்வை : 921

மேலே