மிச்சிகன் கதம்பம் இதழ் - எனது புத்தகங்களை பற்றிய கட்டுரை

ஏதேனும் ஒரு பத்திரிகையில் , குறுக்கெழுத்து போட்டி நிறைவு செய்த்து அனுப்பியதற்கோ, வாசகர் கடிதமாகவோ , நகைச்சுவை துணுக்காகவோ ஏதாவது வகையில் எனது பெயர் ஒரு மூலையில் வந்து விடாதா என்று ஏங்கிய காலங்கள் உண்டு , அந்தக் கனவு கனவாகவே போய்விடும் என்றுதான் நினைத்திருந்தேன் .

முதன் முதலில் மிச்சிகனில் இருந்து வெளிவரும் மிச்சிகன் தமிழ் சங்கம் நடத்தும் கதம்பம் இதழில் "தமிழ் தொலைக்காத தலைமுறை நாங்கள் " என்ற தலைப்பில் நடந்த கவிதைப் போட்டியில் தேர்வு பெற்று எனது கவிதை பெயருடன் வந்தது . அதற்கே அளவில்லாத ஆனந்தம் அடைந்தேன்

பின் பெட்னா விழா 2018 சிறப்பு இதழில் எனது கட்டுரை "உயிராயுதம் " வெளியானது , அதன் பின் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்ட தோலர்ங்க இணைந்து "The common Sense " மாத இதழின் ஆசிரியர் குழுவில் என்னாலான சிறு பங்கெடுப்பும் , அவ்வப்போது அதில் கட்டுரையும் எழுதி வந்தேன் .

முதன் முதலில் நன் எழுதிய புத்தகங்களுக்காக நான் எழுதிய கட்டுரை வெளியானது போய் என்னைப் பற்றிய கட்டுரை வெளியாகி உள்ளது , தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு , ஊக்கப்படுத்தும் விதமாக கட்டுரை வெளியிட்ட மிச்சிகன் தமிழ்சங்கத்திற்கும் , தமிழ்சங்கத்தின் கதம்பம் ஆசிரியர் "ரேகா " அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்

எல்ஜராது

“ செர்கே , கூட்டிக்கொண்டு போன இடம் ஒரு பொட்டல் காடாக இருந்தது , மரங்களில் ஒரு இலை கூட இல்லை , புதர்கள் கூட இலை இல்லாமல் வெறும் குச்சிகளாய் இருந்தது .

"ஒரு ஹாரர் மூவி பார்க்கிற மாதிரி இருக்கு, ஒரு இலை கூட மீதியில்லை, இப்படியுமா சாப்பிடும்? என்றான் சம்பத் .
கண்ணுக்கெட்டிய தூரம் வரை மண்ணாக இருந்தது .

"ஏன் மண் கூட நிறம் மாறி ஒரு மாதிரி பழுப்பு நிறத்தில் இருக்குது " என்று கேட்ட மதிக்கு

"நீங்கள் காரில் இருந்து பார்ப்பது மூவீ இல்லை, ட்ரைலர் தான், இறங்குங்க முழுப்படத்தையும் பார்க்கலாம் “என்று காரை நிறுத்தினான் செர்கே.

சுத்தியும் கிலோமீட்டர் கிலோமீட்டர் வெறும் பழுப்பு மணலாக உள்ள இடத்தில் என்ன படம் காண்பிக்க முடியும் என்று இறங்கினர் மதியும் , சம்பத்தும் .

இறங்கியதும் காலில் மிதிபட்டு மண் தெறித்தது , எதனால் என்று நன்றாக பார்த்த மதியழகனுக்கும் , சம்பத்திற்கும் உடல் சிலிர்த்து அடங்கியது .

மண்ணிற்கு பதில் , நூறில் , ஆயிரங்களில் , லட்சங்களில் , கோடிகளில் , கணிக்கிட முடியாத அளவு எங்கு காணினும் கொத்து கொத்தாக கிடந்தன “egg pod” என்று சொல்லப்படும் வெட்டுக்கிளியின் முட்டைகள் “.


மிச்சிகன் நோவி நகரில் வசிக்கும் வினோத்சந்தர் எழுதிய நாவல் "எல்ஜராது" - "Scientific Thriller "- வகையில் ஆப்பிரிக்காவின் நாடுகளை கதைக்களமாக கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் ஆகஸ்ட் 2020 இல் "Amazon Kindle " தமிழ் மின் நூல்கள்
கிடைக்கும் நாடுகளில் வெளியிடப்பட்டது .

இந்தக் கதை எகிப்தை தாக்கிய 10 பெரும் கொள்ளை நோய்களுள் ஒன்றாக “Book of Exodus” இல் சொல்லப்பட்டிருக்கும் ,பைபிளிலும் , குரானிலும் கூட குறிப்பிடப்பட்டிருக்கும் படை வெட்டுக்கிளிகளை பற்றியது .இந்த படை வெட்டுக்கிளிகள் எப்படி உருவாகிறது , தன்னை எப்படி மாற்றிக் கொள்கிறது ,கூட்டாக எவ்வாறு செயல் படுகிறது என்பதை விரிவாக இந்த நாவல் சுவையான தகவல்கள் மூலம் சொல்கிறது .

வெளிவந்து கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஆன நிலையில் , "சிங்கை அரசு நூலகம் - Singapore Public Library " சார்பில் தொடர்புகொண்டு , இந்த நாவலை அச்சு புத்தங்களாக நூலகத்தில் வைக்க வாங்கி உள்ளனர் .
வினோத் , எட்டு விதமான கதைகளையும் , அது தரும் எட்டு அனுபவங்களையும் கொண்ட "8 திசை " என்னும் சிறுகதை தொகுப்பையும் "Amazon கிண்டல்" லில் வெளியிட்டுள்ளார் ,நகைச்சுவையும் , நட்புமே அனைத்து கதைகளின் அடிப்படை .
இவை தவிர கவிதை , கதை , கட்டுரை , நேர்காணல் என நூறுக்கும் அதிகமான பதிவுகளை கொண்ட இவரின் வலைதளம் paavib blogspot com

வினோத் சந்தருக்கு மிச்சிகன் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக
நாவல் தேர்வானதுக்கும் , மேலும் பல கதைகளை எழுதுவதற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .

Readers Reviews :
எல்ஜராது - பயங்கரம் , எப்படி ? இப்படி எல்லாம் இருக்கானு யோசிக்கும் போது அய்யோனு இருக்கு. அந்த நாட்டு மக்களுக்கும் நம் நாட்டில் பஞ்சாப் மக்களுக்கும் எவ்வளவு கஷ்டம் அதை கதையில் சொன்ன விதமும் வெட்டுகிளின் வகைகளும் அதன் வண்ணங்களும் நன்றாக உள்ளது இன்னும் நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள். -Vadivelu Amazon

என்ன அப்படி பெருசா இருக்க போகுதுனு தான் படிக்க ஆரம்பித்தேன் , எல்ஜராது அருமை - கோபி திருப்பூர்

நான் படித்தை பார்த்த என் மகள் கதை கேட்க , எனது மகளுக்கு வெட்டுக்கிளிகள் , கரப்பாண்பூச்சிகள் என இந்த நாவல் மிகவும் பிடித்து போனது - பாலா சென்னை

The Author mentioned his thoughts and experiences that stays fresh in 90's kids mind. He gave that experiences in an expressive blend, at Various stages of life from a school goer till he became a dad. Especially, The Story of The Daughters Questions are at top. Reader can experience the feeling like a great foodie....by the stories of Ladoo and Karikaalam. -bkan Amazon

I enjoyed reading all the stories especially 'Kevikkenna Pathil' story's golden conversation between dad and young daughter. Dad always the first hero for their daughter. Chandar tried to answer his daughter's every questions. but, daughter gives different definition. , I have to tell this 'Polar vertex' No way, extreme cold temperature touched in North America. Way he explained is very good .I liked it!. – Kindle Customer Amazon

எழுதியவர் : பாவி (10-Jun-22, 11:45 pm)
சேர்த்தது : பாவி
பார்வை : 59

சிறந்த கட்டுரைகள்

மேலே