ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்
ஆங்கில மூல நூலாசிரியர். திரு.வி.கனகசபை. பி.ஏ.பி.எல்
தமிழாக்கம்-திரு.கா.அப்பாத்துரை. (காசிநாத பிள்ளை அப்பாத்துரை) எம்.ஏ,எல்.டி
பதிப்பகம். “திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகம் லிமிடெட். திருநெல்வேலி. வருடம் 1962.
முதற்பதிப்பு.1956 மறுபதிப்பு 1962
நண்பர் ஒருவர் முகநூலில் இப்புத்தகத்தை இறக்கி படிக்க குறிப்பிட்டிருந்தார். அதனை இறக்கி படித்ததில் ஏராளமான செய்திகள் உள்ளன. அதை புரிந்து கொள்ளவே எனக்கு திறமை போதாது, என்றாலும் ஓரளவுக்கு புரியும்படியாக ஒரு தலைப்பை மட்டும் எடுத்து அதிலும் சிறிய அளவிலே கொடுத்துள்ளேன். நேரம் இருப்பின் அதை தொடர்ந்து வாசித்து எழுதலாம்., என்ற எண்ணத்தில்.
தமிழகத்தின் நில இயல் பிரிவுகள்
ஆசியாவின் நடு மேட்டிலிருந்து தெற்கிலுள்ள மாநில முழுவதும் “சம்பு தீவு” அல்லது நாவல் தீவு என்றழைக்கப்பட்டது. இத் தீவில் நாவல் பழ மரங்கள் ஏராளமாய் இருந்ததால் அப்படி வழங்கப்பட்டிருக்கலாம்.
நாவல் தீவு- விந்திய மலைக்கு தெற்கே தட்சிணாபதம் அல்லது தென்னாடு, அதன் தென் கோடியில் தமிழர்கள் வாழும் இடம் தமிழகம்.
இதன் எல்லைகள் - வடக்கே வேங்கட மலை
தெற்கே குமரி முனை
கிழக்கே வங்க விரிகுடா
மேற்கே அரபிக்கடல்
வேங்கடத்துக்கு வடக்கே வாழ்ந்தவர்கள் வடுகர்கள்.
மலையாளம் அக்காலங்களில் ஒரு தனி மொழியாக உருவாகவில்லை
தமிழக எல்லைக்கு வடக்கே- மேற்கு மலை தொடருக்கு அப்பால் “எருமை நாடு” அங்கு எருமைகள் நிறைந்து காணப்பட்டன. இதன் சமஸ்கிருத பெய்ர் “மஹிச மண்டலம்”
எருமை நாட்டுக்கு மேற்கே- துளு நாடு,குடகம்,கொண்கானம்
இவ்வெல்லைகளுக்கு அப்பால் வாழ்ந்த மக்கள் கலிங்கர், பங்களர், கங்கர், கட்டியர், வட ஆரியர்
தமிழகத்திற்கு வெளியில் தமிழ் கவிஞர்களால் காட்டப்படும் முக்கிய நாடுகள்- புத்தர் பிறப்பிடமான கயிலை, மாளவ நாடு., இதன் தலை நகரம் அவந்தி, வச்சிர நாடு, கங்கை ஆற்றங்கரையில் கன்னர், இவர்களின் கடற்துறைமுக நகரம் வாரவணாசி, அல்லது தற்போது காசி மாநகரம் எனப்படுகிறது குஜராத் என்பது துவரை அல்லது துவாரகை
இலங்கை- இலங்கா தீவு, அல்லது இரத்தின தீவு, இதற்கு அடுத்து உயரமான மலை “சமனெளி” இன்று “ஆதம் கொடுமுடி” என்கிறது. இதன் மலை முகட்டில் புத்தரின் அடிச்சுவடு இருப்பதாக நம்ப படுகிறது. அதனால் இது “யாத்ரீக பூமி”யாக விளங்கியது.
இந்திய இலங்கை நடுவே “மணி பல்லவம்” உள்ளது. இதனை காவிரியின் புகாரியில் இருந்து முப்பது யோசனைகள் மூலம் அடையலாம்.
இலங்கைக்கு கிழக்கே “நக்காசாரணர்” அதாவது “அம்மணமான நாடோடிகள்” என்னும் நாடு இருந்திருக்கிறது. இங்குள்ள மக்கள் மனித மாமிசத்தை உண்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.
இந்த நாட்டுக்கு அடுத்து “சாவகம்” என்னும் நாடு இருந்திருக்கிறது. அதன் தலை நகரம் நாகபுரம். இதன் அரசன் தன்னை இந்திரனின் வழி தோன்றல் என்று சொல்லி கொண்டிருக்கிறான். இங்கு பேசிய மொழி தமிழாகத்தான் இருந்திருக்கிறது. இது அனேகமாக சுமத்ரா தீவு அல்லது ஜாவாதீவாக இருந்திருக்கலாம்.
தமிழகம் பதிமூன்று நாடுகள் அல்லது மண்டலங்களை கொண்டதாக இருந்திருக்கிறது.
1.பாண்டி, 2. தென்பாண்டி 3. குட்டம், 4. குடம் 5 கற்கா, 6 வேண் 7 பூழி 8 பன்றி 9 அருவா 10 அருவா வடதலை 11 சீதம் 12 மலாடு 13 புன்னாடு
பாண்டி என்னும் மண்டலம் அல்லது நாடு மதுரை முழுவதுமாக குறிப்பிட்டுள்ளது. இங்கு தூய தமிழ் பேசப்பட்டதாக தெரிகிறது. இங்கு புலவர்கள் மற்றும் கற்றோர்கள் நிறைந்திருந்ததாக சங்ககால புலவர்களால் அறியப்படுகிறது.
பண்டைய மதுரை தற்கால மதுரைக்கு தெங்கிழக்கே ஆறு கல் தொலைவில் பாழைடைந்து கிடக்கும் பழ மதுரை. இதன் வடக்கே வைகை உள்ளது.
ஆனால் பழைய மதுரை வைகையின் தென்கரையில் இருந்ததாக அறிகிறோம். ஆயினும் நகரின் அழிவுக்கு பிற்பாடு ஆறு போக்கு மாறி திசை மாற்றம் உண்டு பண்ணியிருக்கலாம்.
சங்க காலத்தில் வைகையால் மதுரை அழிவு நேரக்கூடும் என்று அறிகிறோம், காரணம் சங்க கால புலவர்கள் பாண்டியனை பாராட்டும்போது “வெள்ளம் பெருங்குற்ற வைகையாலன்றி வேறெந்த எதிரியின் முற்றுகையும் அறியாத மதில் சூழ்” நகரின் காவலனே என்று குறிப்பிடுகிறார்கள்.
மதுரை மேற்கே-முருககடவுளை வணங்கும்”திருவிடானை பரங்குன்று” இருந்ததாக நக்கீரர் குறிப்பிடுகிறார்.
தலை நகருக்கு கிழக்கே மற்றொரு மலை இருந்துள்ளது, அதில் திருமால் குடி கொண்டிருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாண்டிய நாட்டின் எல்லகளோ, மற்ற பனிரெண்டு நாடுகளின் எல்லைகளோ, பண்டைய தமிழ் இலக்கியத்தில் சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை.
அரபிக்கடலை ஒட்டி வடக்கிருந்து தெற்காக கீழ்வரும் வரிசையில் நான்கு நாடுகள் அல்லது மண்டலங்கள் இருந்திருக்கின்றன். அவைகள்:
பூழி, குடம், குட்டம், வேன்
பூழி- மணற்பாலை பரப்பு
குடம்- பொன்னானி கடல் முகப்பிலிருந்து எரணாகுளம் பெரியாற்றின் தென் கோடி கடல் முகம் வரை
குட்டம்-“காயல்களின் நிலம்” தற்காலத்தில் கோட்டய்ம், கொல்லம். இன்றும் இப்பெயருடன் விளங்குகிறது. பாலமலை ஆறு இதனூடே ஓடுகிறது.
வேன்-குமரி முனை வரை பரவி கிடக்கிறது.-தாழந்த குன்றுகள்,பள்ளத்தாக்குகள், வளமான மூங்கிலகள் உள்லது. அதனால் “மூங்கில் காடு” என்கிற பெயரும் உண்டு.
குட்டத்துக்கு கிழக்கே- “கற்கா”- அதாவது பாறை அடர்ந்த பகுதி
மேற்கூறிய ஐந்தும் சேர நாடுகள் என்றழைக்கப்பட்டது.
பெரியாற்றின் கடல்வாய் அருகே “முசிறி” முக்கிய துறைமுகம். இங்கு வெளியிலிருந்து வரும் மக்கள் கூடை கூடையாக நெல் கொண்டு வந்து பண்டமாற்ற முறையில் கொடுத்து மீனை வாங்கி செல்வார்கள்.
மிளகு சாக்குகளில் சந்தைக்கு கொண்டு வந்து கப்பலிலிருந்து இறங்கும் தங்கத்துக்கு ஈடாக இவைகள் விற்கப்படுகின்றன. “இனிய பண்” ஓசை எப்பொழுதும் ஒலித்து கொண்டே இருக்கும். தங்கம் படகுகளில் வந்து இறங்கி கொண்டே இருக்கும்.
இன்னொரு செல்வ துறைமுகம் “தொண்டி” இன்று அகலப்புழை பெயரில் “மாக்கலி” அல்லது பெரிய உப்பு மயமான ஆற்றின் கரையில் இருக்கிறது. “பளுவேறிய குலைகளால் தாங்கிய தெங்குகள்” சூழப்பட்டுள்ளது,
தற்கால குவிலாண்டி நகரிலிருந்து ஐந்து கல் தொலைவு வடக்கே உள்ளது பள்ளிக்கரை. தொண்டி இன்று மறக்கப்பட்டது என்றாலும் “பழைய மரபில் நாயர் அல்லது “தொண்டியில் குஞ்சப்பன்” என்னும் பெயர் தாங்குகிறார்.
அகலப்புழை முன் காலத்தில் தொண்டி அல்லது பள்ளிக்கரை வரை நீர் வழி போக்குவரத்து நடந்து வந்தது. இடையில் “கொத்தாறு” வேறு திசையில் திருப்பி விடப்பட்டதால் நீர் வழி போக்கு வரத்து குறைந்து விட்டது.
தமிழகத்தில் மேற்கு கரை சார்ந்த துறைமுகங்கள்:
துண்டிஸ் நகரம், பிரமகரா, கலைக்கரியாஸ், வாணிக களத்துறையான முசிரிஸ், ஸியூடோஸ்டமாஸ், ஆற்றுமுகம், பொடாபெரூரா, செம்னே, கொரியூரா, பக்கரை, பரீஸ் ஆற்றுமுகம்.
இவற்றை அடுத்து டாலமி அவர்கள் “அயாய்” நாட்டை குறிப்பிட்டு அதன் துறைமுகங்களை குறிப்பிடுகிறார்.
மெல்குண்டா, வாணிக களமான எலகோன் அல்லது எலங்கோர், தலை நகர் “கொட்டியாரா” பம்மலா, கோடி முனையும் நகருமான “கொமரியா”
உள் நாட்டு நகரங்கள்:
ஸியூடோஸ்மாஸூக்கு மேற்கே நரூல்லா, கூபா, பாரூரா,
ஸியூடோஸ்மாஸூக்கும் பார்ஸுக்கும் இடையே “பசகே”, மஸ்தனூர், கூரெல்லூர், புன்னாடா. இங்கு கோமேதகம் ஏராளமாய் கிடைத்தன.
ஆலோ, கோராபெத்ராசின், தலைநகரமான “கரூரா, ஆரெம்பூர்பிடெரிஸ், பந்திபோலிஸ், அடரிமா கொரியூர். உள் நாட்டு நகரமான “அயாய் மொருண்டா”
தமிழகத்தின் வட எல்லையை அறுதியிடுவதில் பிளினியும், டாலமியும் ஒன்று படுகின்றனர்.
மேற்கு தீரத்தில் துண்டிஸூக்கு 9தொண்டிக்கு) சற்று வடக்கிலுள்ள இடமாக குறிப்பிட்டுள்ளனர். “செங்கற்பயணம் இவ்வெல்லையை இன்னும் தெளிவு பட சொல்கிறது.
லிமுரிகே (திமுரிகே) அதாவது தமிழகம் “லியூகெத்தீவு” அல்லது “வெள்ளைத்தீவு” சற்று தெற்கிலிருந்து தொடங்குகிறது என்று கூறுகிறது.இத்தீவு தற்கால “படகரா” நகரத்துக்கு வட கிழக்காக கரையிலிருந்து எட்டு கல் தொலைவில் இருக்கிறது.
நாட்டு மக்கள் அதனை “தூவக்கல்” அல்லது வெள்ளைக்கல் என்று அழைக்கிறார்கள். ஐரோப்பியர்கள் அதனை “பலிப்பாறை” என்றுதான் அழைக்கின்றனர். ஏனென்றால் போர்த்துகீசியர்கள் முதன் முதலில் கோழிக்கோட்டில் வந்திறங்கிய காலத்தில் கோட்டக்கல் கடற்படை வீரர்கள் ஒரு போர்த்துக்கீசிய கப்பலை தாக்கி அதில் சிறைபிடித்த அத்தனை பேரையும் அந்த பாறையிலேயே பலியிட்டார்களாம்.
“நாரா” என்பது என்னவென்று புரிந்து கொள்ளமுடியவில்லை, அது அகல்புழை ஆற்றின் கரையில் அமைந்திருந்த ஒரு சிற்றூராய் இருந்திருக்கலாம்.
துண்டிஸ் என்பது எப்படியும் குவிலாண்டி நகரிலிருந்து ஏறத்தாழ ஐந்து கல் வடக்கேதற்கால பள்ளிகரையில் முன்பு அமைந்திருந்த “தொண்டி” என்பதில் ஐயமில்லை.
“நாம் குறிப்பிடும் காலத்தில் மக்கள் தம் காலத்துக்கு முன் தமிழகத்தின் எல்லை பரப்பு அன்றிருந்த எல்லையை கடந்து தெற்கில் நெடுந்தொலைவு படர்ந்திருந்தது, என்பதையும் குமரி முனைக்கு அப்பாலிருந்து அந்நிலத்திலே குமரிக்கோடு என்ற மலையும் பற்றுளி என்ற ஆற்றினால் வளமூட்டப்பட்ட அகண்ட ஒரு பேரெல்லை யையும், அது உள்ளடக்கியிருந்ததென்பதையும் நினைவில் கொண்டிருந்தனர்.”
இன்னும் வரும் இந்த கட்டுரை