பிறந்தநாள் வாழ்த்து - தோழருக்கு
தோழர்
பலரை வைத்து கம்பேர் செய்தபோது.
இங்கு முகநூலில் பெரும்பாலானப் பெண்கள் தங்களைக் குறித்த அனுமானங்களில் தங்களை தனித்துக்
காண்பிப்பதிலோ இல்லை கூடுதல்
அறிவு அழகுப் படுத்திக் காண்பிப்பதிலோ மெனக்கெடவே செய்கிறார்கள். அதில் தவறில்லை.
அதுக்கூட ஓர் அழகான இரசனைத் தின்றத் தவறுகள் தான்.
சிலப் பெண்கள் அவர்களை யாருடனும் ஒப்பிடும் அளவிற்கு ஒப்புக் கொள்ளமாட்டார்கள் . அதுபோல்
அடுத்துப்பேசும் ஆள் பார்த்தேப் பேசுவார்கள் பழகுவார்கள் (அது அவர்களுடைய Safety Measure என்றுக்கூட சொல்லிக் கொள்ளலாம்)
அதுவும் தவறில்லை.
எனக்கு கவிதையில் தவிற பொய் சொல்ல வராது.
நான் இன்றளவு முன்பு எப்போதும்போல் இங்கு அடிக்கடி பிரவேசம் செய்பவன் இல்லை. ஆனால் ஒரு நாளிற்கு ஒருமுறை ஏனும் பிரவேசம் செய்துவிடுகிறேன்.
காரணம், சிலருடையப் பதிவு. பதிவுகளிலேயே இத்தனைக் காலமும்
இலயித்திருந்த எனக்கு.
ஒரு முகத்தின்மீதான தேடல் இன்றெப்போதிலிருந்தோ துவங்கி இருக்கிறது.
ஆம் அதொரு மகாலக்ஷ்மிகரமான முகச்சாயலின் மீதான தேடல். கர்பகிரகத்தில் பிரதீஷ்ட்டை செய்யப்பட்டிருக்கும் தேவியின்
முகம்போலான சாயலின் மீதான
தேடல்.
எப்போதும் பிரம்ம முகூர்த்த படுக்கைப் புரள்விற்குப் பின்னால் தரிசிப்பது வீடியோ காலில் மனைவி குழந்தைகளின் முகமாகத்தான்
முதலில் இருக்கும். அடுத்து அன்பிற்குரிய ப்ரியப்பட்ட டேஷ் (ஒருவரின் குரல்) அதற்கப்பால்
அலுவலக காரில் ஏறியப் பிறகு
முதலில் துலக்குவது தங்களின்
முகம். அதில் சொரியும் பொழில்.
புன்முறுவல். எல்லோரிடத்திலும்
உங்களிடமிருக்கும் பாரபட்சமில்லாத
விசாரிப்பு.
நிமிஷத்துக்கு நிமிஷம் வேறுமாதிரி இருக்கின்ற பெண்களுக்கு மத்தியில்
இதுநாள் வரை ஒரே மாதிரி இருக்கிற
பக்குவமான குணம், உங்களைச் சுற்றி இருப்போரை கைப் பிடித்து
நடை பயில்விக்கும் பாங்கு.
ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு ?
சராசரியாக இல்ல்லாமல் அதனில் நின்று தங்களை விலகிக் காண்பிக்க
எத்தனிக்கும் பலரும் அழகான கண்களின் இரசனைகளிலிருந்து
அகன்று எங்கோ காணாமற் போயிவிடுவார்கள் .
யார் ஒருவரை கண்ட நொடிகளில்
நம் வாழ்வின் வசந்த காலங்களை
நினைவுறுத்துகிறார்களோ, வாழ்வின்
சந்தோஷங்களை நம் கண்முன்னால்
கொண்டு தருகிறார்களோ, அவர்கள் எல்லோரும் சராசரியானவர்களே.
ஆம், அந்த முகங்களும் அப்படித்தான்.
அப்படித்தான் உங்களின் சராசரி முகம்.
என்வாழ்வின் பிடித்தங்களை எல்லாம்
என் முன்னால் கொண்டு நிற்கிறது.
உங்கள் சராசரிப் பார்வையால்
கடந்துவந்த கசப்புகள் அனைத்தும்
சுக்குநூறாகிறது. உங்கள் பொலிவுறும் விழிகளை பின் தொடருவோருக்கெல்லாம் வயது குறைகிறது. இளமை திரும்புகிறது.
அந்த எல்லோருடைய சார்பிலும்
அதற்காக நான் உங்களுக்கு
நன்றிக்குரியவன் ஆகிறேன்.
அளவான அழகினாலும், அசராத நம்பிக்கையினாலும், திமிராத பாங்கினாலும் என்னை அவ்வப்போது ஆதிக்கம் செய்கிறீர்கள், நானும்
அதீத மரியாதைகளுன் ப்ரியங்களுடன்
அப்படியே உங்களை இரசித்துக் கடந்துவிடுகிறேன்.
Yes I admit that is true,
I admire you
I relish you
I am in awe of you
I savor your thoughts.
I cherish sharing this at this moment
இவை ஆடம்பரமில்லாதவனின் வார்த்தைகள் . இதை ஏற்றுக் கொள்வீரா தெரியவில்லை. உலகின் பெரிய பெரிய ஆச்சர்யங்கள் என எதை எதையோ முன்வைக்கிறார்கள். இப்படிப்பட்ட முகங்களைக் கொண்ட மதிப்பிற்குரிய பெண்களை அல்லவா ஆச்சர்யங்களில் அதிசயங்களில் முதலில் சேர்த்திருக்க வேண்டும் . பைத்தியக்காரர்கள் அவர்கள். அவர்களுக்குத் தெரிவதில்லை. இத்தனை சாந்தமான முகங்களுக்கு முன்னால் சவால்களே தோற்றுவிடும் என்று, அரசப் போர்களுக்கு முன்னால்
அணிவகுக்கமறுக்கப்பட்ட போர்க்கருவி
பெண்களின் சாந்த முகம். போரே இருந்திருக்காது இல்லையா .
இதை எழுதி முடிக்கும் போது இருட்டி இடைவிடியல் ஆகிடும். இருங்க
அதுக்கு முன்னால், இன்னைக்கு
மகளீர் தினமும் இல்லையா ? . என் அம்மாவிற்கும் மனைவிக்கும் முதல், வாழ்த்து அனுப்பிட்டு இதோ உங்களுக்கும்.
அத்தனை எளிதில்
மறக்கக்கூடிய முகமாக இருந்திருந்தால் புகைப்படம் இணைத்திருப்பேன். இதோ நினைவில் குடிகொண்ட உங்கள் முகங்களுடன் வாழ்த்துகிறேன்.
நடமாடும்
மலர்தாளிகளுக்கு,
பூந்தொடலைகளுக்கு (Garlands) பூக்காரனின் பிறந்தநாள் ஆசிகள் .
பைராகி