நிலவின் பார்வையில் ஆண்

அவன் தாய் உணவை ருசித்த நாளும்
தன் தேவதையை ரசித்த நாளும்
தனிமையில் இருந்த நாளும்
இந்த நிலவொளி மட்டும் அறியும்.


தேயும் நிலவை போல
ஓயாமல் உழைக்கும் ஆண்
ஒரு நாள் பௌர்ணமி போல்
என்றோ இளைப்பாறுகிறான்.


காதலை வருணிக்கும் போதும்
காதலியை வருணிக்கும் போதும்
கனவுகளை வருணிக்கும் போதும்
நிலவை மட்டுமே உவமையாய் வருணிப்பான்.


தாய் மடி இல்லா நாட்களில்
நிலவொளி தேடி உறங்கினான்
நிலவொளி கூட இல்லா நாட்களில்
யாரிடமும் சொல்லா உருகினான்.


மீசை வளைவு அழகையெல்லாம்
மூன்றாம் பிறை நிலவு சொல்லும்
மீசை இல்லா ஆண்களை உணர்த்தவோ?
அமாவாசை ஒன்று வந்து செல்லும்.


தனிமையில் இரவில் உழைக்கும் ஆணிற்கு
நிலவும் துணையாய் உறக்கம் தொலைக்கும்.
தனிமையில் உறக்கம் தொலைத்த ஆணிற்கு
நிலவொளி வந்து தாளாட்டு பாடும்.


வீரம் வருணிக்க நிலவை பார்த்தால்
அன்று காதல் வருணித்து கனவில் சிரிப்பான்..
காதல் வருணிக்கும் ஆண்மகன்கூட
ஒருநாள் பௌர்ணமி போல்
வீரம் பொங்குவான்.


ஆணின் அழகை மறைந்து ரசிக்கவே
விடியல் வந்ததும் வெட்கம் கொண்டேன்.
தனிமையில் வாடும் ஆணை பார்கவே
இரவில் வந்து துணையாய் நின்றேன்.


பிறருக்காக உழைக்கும் உயிர்க்கு
ஆண் என்று பெயரை கண்டேன்.
நிலை இல்லாமல் தேய்வதாலோ
நிலவு என்று பெயரை கொண்டேன்.

எழுதியவர் : Mohanaselvam (26-Jun-17, 8:18 pm)
பார்வை : 211

மேலே