ஒர் எழுத்துக் கவிதை

உன் மேல் கொண்ட
ஒரு தலைக் காதலில்
ஒரு பக்கத்திற்குக் கவிதை எழுத நினைத்தேன்
முடியவில்லை
ஒரு வரியில் கவிதை எழுத நினைத்தேன்
முடியவில்லை
இறுதியில்
ஒரு எழுத்தில் மட்டுமே கவிதை எழுத முடிந்தது
அந்த எழுத்து "நீ" !
என் காதல் எப்பொழுது இரு தலை ஆகி
"நீ"யுடன் "நான்" சேரும் ?