பாசிவன் பாரதி ராமச்சந்திரன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : பாசிவன் பாரதி ராமச்சந்திரன் |
இடம் | : நெல்லை - திருநெல்வேலி |
பிறந்த தேதி | : 30-Jul-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 766 |
புள்ளி | : 247 |
தமிழ் கிராமத்தில் பிறந்து தமிழ் நகரத்தில் படித்து , வளர்ந்து அன்னிய மொழி மாநிலத்தில் பணிபுரியும் பூமியியல் வல்லுநர். அன்னை தமிழை அதிகமாய் நேசிக்கும் ஒரு வளரும் எழுத்தாளனாய் ....தொடர்புக்கு 9600524399
தாய் தந்தையும் தாண்டி
பேர பேத்திகள் பலபெற்று
முதிர்வுற்று தளர்வுற்ற- நம்
தாத்தா பாட்டிகளுக்கு சமர்ப்பணம்!
தாத்தா பாட்டி சொன்ன கதைகள்
தந்ததே வாழ்வியல் நிறைகள்
தடையின்றி நீங்கிய குறைகள்
தரவில்லை பிரிவினை கறைகள்!
நான்கு மணிக்கே விழித்தார்கள்
ஐந்து மணிக்கே உழைத்தார்கள்
ஆறு பிள்ளைகளை வளர்த்தார்கள்
ஏழு ஜென்மமும் மறந்திடலாகாதே!
மரங்கள் சூழ வீடு கட்டி
மரநிழலில் தொட்டிலும் கட்டி
மரக்கிளை வேர் தண்டில்
கைமருந்து பல தந்தவர்களன்றோ!
பக்குவமாய் உடை உடுத்த
பட்டணம் சென்று கல்வி கற்க
பணம் காசு சேர்த்து வைக்க
பக்குவமாய் கற்றுத் தந்தவர்களன்றோ!
தளர்ந்துப் போன உடலானாலும்
உலர்ந
ஒரு சென்டி மீற்றர் உயர மண் உருவாக எவ்வளவு காலம் தேவைப்படும் ?
கடைத்தெருவின் இடுக்கில் என்னை பெற்றவள்
அழுகுரல் கேட்டு வலி மறந்தவள்
அற்ப வயதினில் கணவரை இழந்து
என்னை ஆளாக்கிய தெய்வம் அவள்
ஊர் பார்வையை ஓரக்கண்ணில் மறைத்து
தனித்த இரவுகளில் தேம்பி அழுதவள்
வீதிகளை தூயப்படுத்தி வீடுகளின்றி தவித்தவள்
குருதிகளை விற்று குடில் அமைத்தவள்
மாற்ற உடையின்றி இரவினில் குளித்தவள்
மார்கழி குளிரினில் மழையில் நனைந்தவள்
ஒருமுழம் பூவைக்க ஓராண்டு காத்திருந்தவள்
அத்திருவிழாவில் தீச்சட்டியை எனக்காய் சுமந்தவள்
கயவர் பலரால் முகம் சுழித்தவள்
கண்ணியமான சிலரால் என்னை வ
இந்த கால இளம் தம்பதிகள் அம்மா அப்பாவை நன்றாக கவனித்து கொள்கிறார்களா? இல்லையெனில் காரணம் என்ன? ஆம் எனில் எத்தனை சதவிகிதம் அப்படி இருக்கிறார்கள்?
நமக்கே நமக்காக ஒருவர் துணையாக வந்த பின்பு வேறு நபர் மீது காதல் வருவது நடைமுறை சாத்தியமா?
------------------ எழுத்தாளர்களே ...அதிசயம் (அதிர்ச்சி) .ஆனால் உண்மை ------------------------------
உங்கள் கவிதைகளை பத்திரிகை / ஊடகங்களுக்கு அனுப்புவதாக இருந்தால் முதலில் அனுப்பி விட்டு அதில் வந்த பிறகு எழுத்தில் பதிவு செய்யுங்கள் .
என் சமிபத்திய எழுத்து கவிதைகள் வேறு பெயர்களில் இணையங்களில் பதிவு ஆன இணைப்புகள் கீழே .இன்னும் தோண்டினால் எத்தனை நகல்கள் வருமோ தெரியாது . எனக்கு எழுதுவது தொழில் இல்லை .ஆனால் நம்மில் சில பேருக்கு அது லட்சியமாக , கனவாக இருக்கலாம் . கவனமாக இருங்கள் .
https:// (...)
படைப்புகளை திருடும் நபர்கள் மீது DMCA , அல்லது Indian Copyright Law பயன்படுதலாம். DMCA முறைப்படி தனியாக copyright என்று வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியன் copyright law வின் படி அது முக்கியம். உருவாகுபவர்க்கே அது சொந்தம். முதலில் உருவாக்கியவர் என்று நிரூபித்தால் போதும். எழுத்துவில் நீங்கள் சமர்ப்பித்த தேதியே போதுமானது.
இதை பற்றிய விரிவான வழிமுறையை எழுத்து குழும நண்பரில் ஒருவர் விரைவில் வெளியிடுவார். எழுத்து தளத்தில் இருந்தே உரிமை கோரும் முறையை அறிமுகம் செய்ய வழிவகை செய்வோம்.
------------------------------------------------------------------------------------------
மண்ணில் தவழும் என் மடி மீன்
வி்ண்ணில் தடம் ஒரு நாள் மிதிக்கும்
கண்ணின்றி பிறந்ததால் குருடாக விட மாட்டேன்
கருணை மறந்த தாயாய் தத்தளிக்க மாட்டேன்
பிறவிக் குருடானாலும் பிறந்தது என் மடியில்
பிறப்பின் சாதனை பெரிதாகிட சாகவும் துணிவேன்
ஊட்டிய என் தாய்ப்பால் உயிர் மூச்சுக்காய்
உயிருள்ளவரை உணர்வு பொங்கிட வளர்ப்பேன்
--------------------------------------------------------------------------------------------
நண்பர்கள் (61)

நிஷாந்த்
வேலூர்

பார்த்திப மணி
கோவை

ரசிகன் மணிகண்டன்
நல்லூர்-விருத்தாச்சலம்

செல்வக்குமார் சங்கரநாராயணன்
மதுரை ,சிந்துபட்டி
