மண்ணில் தவழும் என் மடி மீன் - போட்டி கவிதை

------------------------------------------------------------------------------------------
மண்ணில் தவழும் என் மடி மீன்
வி்ண்ணில் தடம் ஒரு நாள் மிதிக்கும்
கண்ணின்றி பிறந்ததால் குருடாக விட மாட்டேன்
கருணை மறந்த தாயாய் தத்தளிக்க மாட்டேன்
பிறவிக் குருடானாலும் பிறந்தது என் மடியில்
பிறப்பின் சாதனை பெரிதாகிட சாகவும் துணிவேன்
ஊட்டிய என் தாய்ப்பால் உயிர் மூச்சுக்காய்
உயிருள்ளவரை உணர்வு பொங்கிட வளர்ப்பேன்
--------------------------------------------------------------------------------------------