இயற்பியலும் வேதியியலும் உயிரியலுக்காகதான்
இயற்பியலும் வேதியியலும் உயிரியலுக்காகதான்...
கணிதமும், கணிப்பொறியும், மனிதனுக்கு பணிபுரியதான்...
மொழியும், புலமையும் உரையாடல் வளமைக்காகதான்...
இங்கே சந்தேகம் எழுந்துவிட்டதே...
இன்பத்தை உருவாக்குவதா? இல்லை...
இன்பத்தை பிறரிடமிருந்து பறித்துக்கொடுப்பதா??
எது கல்வி???
பலநூறு வருட அனுபவங்களை,
சில பக்கங்களில் பகிர்ந்துவிடும்... வரலாறு...
உண்டுறங்கி கழிக்கும் நேரங்களினூடே...
உடலுக்கு ஊக்கமளிக்கும்... விளையாட்டு...
நண்டுறங்கும், வளைகளாய்...
பல்லாண்டு மர கிளைகளாய்...
பல்லவர்களின் சிலைகளாய்...
மனதை தோண்டி படர்ந்து உறைந்திருக்கும்,
உள்ளுணர்வுகளை வெளிக்கொணரும்... கலை...
இவையெல்லாம் இந்த உலகில் உண்டு...
இனிமையான வாழ்க்கையை சுவைக்க...
இவற்றையெல்லாம், கல்வியெனும் கலனில் அடைத்து, ஆங்கே
சில வியாபாரிகள் கூவிக்கொண்டிருக்க...
காலம் எனும் காலன் வந்து, என்னையும் அங்கே ஏவிவிட,
நானும் வாங்கிவிட்டேன்...
விலை அதிகம் கொடுத்தும்... இனிக்கவில்லையே...
இருந்தும் விழுங்கிவிட்டேன்...
இப்போது செரிக்கவில்லையே..
என்செய்வேன்...
உணர்வுகளுக்கும், உண்மையான இன்பத்திற்கும்,
ஊட்டம் கிடைக்கவில்லையே...
பணமெனும் மலம் மட்டும் பலனாய் கிடைக்கும்..,
இந்த கலப்பட கல்வியை ஏன் புசித்தேன்...
புசித்தபின்பும் பசித்திருக்கவா???